ஆப்நகரம்

இளையராஜா 75 : இன்று எந்தப் படப்பிடிப்புகளும் நடைபெறவில்லை

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் சார்பில் இளையராஜா 75 விழா நடைபெற்றதைத் தொடர்ந்து, இன்று எந்த படப்பிடிப்புக்களும் நடைபெறவில்லை.

Samayam Tamil 4 Feb 2019, 1:13 pm
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் சார்பில் இளையராஜா 75 விழா நடைபெற்றதை தொடர்ந்து, இன்று எந்த படப்பிடிப்புக்களும் நடைபெறவில்லை.
Samayam Tamil download


இசையமைப்பாளர் இளையராஜாவின் 75வது பிறந்தநாளையொட்டி, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் சார்பில் இளையராஜா 75 என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. சென்னை ஒய்எம்சிஏ மைதானத்தில் நேற்று, நேற்று முன்தினம் என இரண்டு நாட்கள் இந்நிகழ்ச்சி நடைபெற்றது.

முதல் நாள் நிகழ்ச்சியில் நடிகர், நடிகையர் பலர் இளையராஜாவின் பாடல்களுக்கு ஆடியும், சில பாடல்களைப் பாடியும் ரசிகர்களை மகிழ்வித்தனர். இரண்டாவது நாளான நேற்று இளையராஜாவே தனது பாடல்களை, பல இசை கலைஞர்களுடன் சேர்ந்து பாடினார்.

இந்நிகழ்ச்சியில் ரஜினி, கமல் உள்ளிட்ட முன்னணி திரைப் பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

நேற்று இரவு முழுவதும் இந்த விழா நடைபெற்றதைத் தொடர்ந்து, இன்று எந்த படப்பிடிப்புக்களும் நடைபெறவில்லை என்று தகவல் வெளியாகி உள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்