Please enable javascript.Ilaiyaraja 75,இளையராஜா 75 : இன்று எந்தப் படப்பிடிப்புகளும் நடைபெறவில்லை - no shoots today due to ilaiyaraja 75 - Samayam Tamil

இளையராஜா 75 : இன்று எந்தப் படப்பிடிப்புகளும் நடைபெறவில்லை

Samayam Tamil 4 Feb 2019, 1:13 pm
Subscribe

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் சார்பில் இளையராஜா 75 விழா நடைபெற்றதைத் தொடர்ந்து, இன்று எந்த படப்பிடிப்புக்களும் நடைபெறவில்லை.

download
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் சார்பில் இளையராஜா 75 விழா நடைபெற்றதை தொடர்ந்து, இன்று எந்த படப்பிடிப்புக்களும் நடைபெறவில்லை.

இசையமைப்பாளர் இளையராஜாவின் 75வது பிறந்தநாளையொட்டி, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் சார்பில் இளையராஜா 75 என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. சென்னை ஒய்எம்சிஏ மைதானத்தில் நேற்று, நேற்று முன்தினம் என இரண்டு நாட்கள் இந்நிகழ்ச்சி நடைபெற்றது.

முதல் நாள் நிகழ்ச்சியில் நடிகர், நடிகையர் பலர் இளையராஜாவின் பாடல்களுக்கு ஆடியும், சில பாடல்களைப் பாடியும் ரசிகர்களை மகிழ்வித்தனர். இரண்டாவது நாளான நேற்று இளையராஜாவே தனது பாடல்களை, பல இசை கலைஞர்களுடன் சேர்ந்து பாடினார்.

இந்நிகழ்ச்சியில் ரஜினி, கமல் உள்ளிட்ட முன்னணி திரைப் பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

நேற்று இரவு முழுவதும் இந்த விழா நடைபெற்றதைத் தொடர்ந்து, இன்று எந்த படப்பிடிப்புக்களும் நடைபெறவில்லை என்று தகவல் வெளியாகி உள்ளது.
உங்கள் கருத்தை பதிவு செய்க

அடுத்த செய்தி

Tamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக்பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்