ஆப்நகரம்

பிரியா வாரியருக்கு போட்டியாக களமிறங்கும் நூரின் செரிப்!

'ஒரு அடார் லவ்' படத்தின் நாயகி பிரியா வாரியருக்கு போட்டியாக இன்னொரு கதாநாயகி நூரின் செரிப்பும் தற்போது ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி வருகிறார்.

Samayam Tamil 27 Apr 2018, 3:50 pm
'ஒரு அடார் லவ்' படத்தின் நாயகி பிரியா வாரியருக்கு போட்டியாக இன்னொரு கதாநாயகி நூரின் செரிப்பும் தற்போது ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி வருகிறார்.
Samayam Tamil noorin
பிரியா வாரியருக்கு போட்டியாக களமிறங்கும் நூரின் செரிப்!


'ஒரு அடார் லவ்' படத்தின் 'மாணிக்க மலராய பூவி' பாட்டின்மூலம் பிரபலமானவர், மலையாள நடிகை பிரியா பிரகாஷ் வாரியர். அந்தப் பாடலில் சில நிமிடங்களே வரும் பிரியா வாரியர், தனது கண்ணசைவால் ஆயிரகணக்கான ரசிகர்களின் மனதில் இடம்பிடித்து விட்டார்.

பிரியா வாரியரின் மூலம் அந்த படத்திற்கு பெரியளவில் வரவேற்பு கிடைத்து, தற்போது நான்கு இந்திய மொழிகளில் வெளியாக உள்ளது.

பிரியா வாரியருக்கு போட்டியாக களமிறங்கும் நூரின் செரிப்!


இந்த நிலையில் பிரியா வாரியருக்கு போட்டியாக 'ஒரு அடார் லவ்' படத்தின் இன்னொரு கதாநாயகி நூரின் செரிப்பும் தற்போது பிரபலமாகி வருகிறார்.

நூரின் செரிப் நடித்துள்ள டப்மாஸ் வீடியோக்கள் பிரபலமாகி வரும் வேளையில், வெஸ்டர்ன் இசைக்கு பரத நாட்டியமாடியுள்ள அவரது வீடியோ ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. 15 விநாடிகள் மட்டுமே ஓடும் இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்