ஆப்நகரம்

பெட்டி, பெட்டியா பணம் கொடுத்தாலும் என்னால முடியாது: கமல்

பெட்டி, பெட்டியா பணம் கொடுத்தாலும் தன்னால் முடியாது என்று உலக நாயகன் கமல் ஹாஸன் தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 15 Jun 2020, 6:50 pm
பன்முகத் திறமை கொண்ட கமல் ஹாஸனும், இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மானும் சமூக வலைதளத்தில் உரையாடினார்கள். தலைவன் இருக்கின்றான் என்கிற அந்த நிகழ்ச்சியில் முதலில் கமல் ஹாஸனும், மக்கள் செல்வன் விஜய் சேதுபதியும் தான் உரையாடினார்கள். விஜய் சேதுபதி கேட்ட கேள்விகளுக்கு கமல் பதில் அளித்தார். அந்த நிகழ்ச்சி முடிந்த பிறகு கமல் ஹாஸனின் தலைவன் இருக்கின்றான் படத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறார் என்கிற அறிவிப்பு வெளியானது.
Samayam Tamil kamal haasan


இந்நிலையில் தற்போது ரஹ்மானும், கமல் ஹாஸனும் உரையாடியுள்ளனர். அந்த நிகழ்ச்சியில் தேவர் மகன் படம் பற்றி கமல் கூறியதாவது,

நான் தேவர் மகன் பட ஸ்க்ரிப்ட்டை எழுதிக் கொண்டிருந்தபோது நண்பர் ஒருவர் எனக்கு சவால் விடுத்தார். ஸ்க்ரிப்ட்டை எழுதிக் கொடுக்காவிட்டால் நான் படத்தில் இருந்து வெளியேறிவிடுவேன் என்று அந்த நண்பர் தெரிவித்தார். நான் கண்டிப்பாக எழுதிக் கொடுக்கிறேன் என்று அவரிடம் கூறினேன். இதையடுத்து மொத்த ஸ்க்ரிப்ட்டையும் எழுதி முடிக்க எனக்கு 7 நாட்கள் ஆனது.
அனைத்து ஸ்க்ரிப்ட்டுகளையும் 7 நாட்களில் எழுதி முடிக்கச் சொன்னால் என்னால் முடியாது. சில ஸ்க்ரிப்ட்டுகளை எழுதி முடிக்க ஓராண்டு ஆகும். சில 30 மாதங்கள் வரை ஆகும். மேலும் சில ஸ்க்ரிப்ட்டுகளை ஒரு மாதத்தில் எழுதி முடித்துவிடலாம். நீங்கள் பெட்டி, பெட்டியாக பணம் கொடுத்தாலும் வேலை நடக்காது. அது அதற்கு நேரம் எடுக்கும் என்றார்.

தேவர் மகன் படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கப்படும் என்று கமல் ஹாஸன் கடந்த 2018ம் ஆண்டு அக்டோபர் மாதம் அறிவித்தார். ஒரே ஷெட்யூலாக பொள்ளாச்சியில் படப்பிடிப்பை நடத்தி முடிக்க திட்டமிட்டார் கமல். ப்ரீ ப்ரொட்க்ஷன் பணிகள் முழுவீச்சில் நடந்து வந்த நிலையில் கமல் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படத்தில் நடிக்க சென்றுவிட்டார். இந்தியன் 2 பட வேலைகளை முடிந்த பிறகு தலைவன் இருக்கின்றான் ஷூட்டிங் துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த பிப்ரவரி மாதம் செட்டில் கிரேன் விழுந்து உதவி இயக்குநர் உள்பட 3 பேர் பலியான பிறகு இந்தியன் 2 படப்பிடிப்பு நடக்கவில்லை. இந்நிலையில் படம் கைவிடப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால் படம் கைவிடப்படவில்லை என்று அதை தயாரித்து வரும் லைகா நிறுவனம் விளக்கம் அளித்தது. ஈவிபி ஃபிலிம் சிட்டியில் படப்பிடிப்பு நடந்தபோது தான் விபத்து ஏற்பட்டது. இதையடுத்து படப்பிடிப்பை ஈவிபி ஃபிலிம் சிட்டிக்கு பதில் பின்னி மில்ஸில் நடத்த முடிவு செய்துள்ளார்கள்.
தலைவன் இருக்கின்றான் நிகழ்ச்சியில் கமல் இந்தியன் படத்தில் வந்த கப்பலேறிப் போயாச்சு பாடல் குறித்தும் பேசியுள்ளார். கமல் கூறியதாவது,

இந்தியன் படத்தில் வேலை செய்தபோது கப்பலேறிப் போயாச்சு பாடலை முதன்முதலாக கேட்டேன். எனக்கு அந்த பாடல் பெரிதாக பிடிக்கவில்லை. அதை இயக்குநரிடமும் கூறினேன். ஆனால் ஷூட் செய்தபோது போது அந்த பாடல் பிடித்துவிட்டது என்றார். கமல் ஹாஸன் தான் ஷங்கரின் எந்திரன் படத்தில் நடிக்க வேண்டியது. ஆனால் அது நடக்காமல் போக ரஜினியை வைத்து எந்திரன் படத்தை எடுத்து வெளியிட்டார் ஷங்கர் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்