ஆப்நகரம்

ஒரு விஷயத்தில் மட்டும் திருப்தி இல்லை! அரசியல் கட்சி துவங்குவது பற்றி ரஜினி பேட்டி

இன்று ரஜினி அரசியல் கட்சி பற்றிய அறிவிப்பு வெளியிடுவார் என எதிர்பார்த்தனர். ஆனால் இந்த முறையும் ரசிகர்களுக்கு ஏமாற்றம் தான் கிடைத்துள்ளது.

Samayam Tamil 5 Mar 2020, 1:47 pm
"நான் அரசியலுக்கு வருவது உறுதி. அது காலத்தின் கட்டாயம்" என ரஜினி அறிவித்து இரண்டு வருடங்கள் ஆகிறது. ஆனால் இன்னும் அரசியல் கட்சி துவங்காமல் இருக்கிறார்.
Samayam Tamil Rajinikanth


சில மாதங்களுக்கு முன்னர் செய்தியாளர்களிடம் பேசும்போது 'கட்சி துவங்கும் பணிகள் 90 சதவீதம் முடிந்துவிட்டது' என கூறியிருந்தார்.

இந்நிலையில் இன்று ரஜினி மக்கள் மன்றம் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னை ராகவேந்திரா திருமண மண்டபத்தில் நடைபெற்றது. அப்போது அரசியல் கட்சி துவங்குவது உள்ளிட்ட பல விஷயங்கள் பற்றி விவாதிக்கப்பட்டுள்ளது.

அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்திடம் வழக்கம்போல 'கட்சி எப்போது துவங்குவீர்கள்?' என கேட்கப்பட்டது.

அதற்கு பதில் அளித்த அவர் "அதை பற்றி பேசுவதற்காகத்தான் ஒரு ஆண்டுக்கு பிறகு மாவட்ட செயலாளர்களை சந்தித்தேன். அவர்களிடம் நிறைய கேள்விகள் இருந்தது. அதற்கெல்லாம் பதில் கொடுத்தேன். நிறைய விஷயங்களை பரிமாறிக் கொண்டோம். அவர்களுக்கு ரொம்ப திருப்தி. ஆனால் ஒரு விஷயத்தில் எனக்கு திருப்தி கிடையாது, ஏமாற்றம் தான். அது என்ன என்பது இப்போது கூற விரும்பவில்லை. நேரம் வரும்போது சொல்கிறேன்" என கூறியுள்ளார்.

மேலும் நடிகர் கமல்ஹாசனுடன் கூட்டணி சேர்வது பற்றி கேட்கப்பட்ட கேள்விக்கு "அதற்கு நேரம் தான் பதில் சொல்லும்" என பதில் கூறினார் ரஜினி.

ரஜினி இன்று தன் ரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்திக்கிறார் என தகவல் வந்ததும் ரசிகர்கள் அனைவரும் அரசியல் கட்சி பற்றிய அறிவிப்பு வரும் என தான் ஆவலாக எதிர்பார்த்தனர். ஆனால் இந்த முறையும் அவர்களுக்கு ஏமாற்றம் தான்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்