ஆப்நகரம்

ஜூன் 12 முதல் 'கபாலி' இசை

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் மிகுந்த எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள 'கபாலி' படத்தின் இசை வருகிற ஜூன் 12ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

TNN 3 Jun 2016, 11:53 am
சென்னை: சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் மிகுந்த எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள 'கபாலி' படத்தின் இசை வருகிற ஜூன் 12ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Samayam Tamil official kabali audio to be launched on june 12th
ஜூன் 12 முதல் 'கபாலி' இசை


இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள 'கபாலி' படத்தின் அதிகாரப்பூர்வ இசை உரிமத்தை பிரபல இசை நிறுவனமான 'திங் மியூசிக் இந்தியா' நிறுவனம் பெற்றுள்ளது. Happy to announce that #Kabali Audio Launch will happen on June 12!! @superstarrajini @beemji @Music_Santhosh @thinkmusicindia— Kalaippuli S Thanu (@theVcreations) June 2, 2016 முன்னதாக இப்படத்தின் இசை வெளியீடு ஜூன் 9ஆம் தேதி நடைபெறும் என கூறப்பட்டது. தற்போது, இப்படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு தனது டுவிட்டர் பக்கத்தில் 'கபாலி' இசை வெளியீட்டின் அதிகாரப்பூர்வ தேதியை வெளியிட்டுள்ளார். 'கபாலி படம் ஜூலை 1ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்