ஆப்நகரம்

மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் நடிப்பில் ‘கைதி நம்பர் 150’ டிரைலர்

மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் நடிப்பில் ‘கைதி நம்பர் 150’ டிரைலர் வெளியானது.

TNN 7 Jan 2017, 7:45 pm
ஐதராபாத்: மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் நடிப்பில் ‘கைதி நம்பர் 150’ டிரைலர் வெளியானது.
Samayam Tamil official theatrical trailer of mega star chiranjeevis grand comeback movie khaidi no 150
மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் நடிப்பில் ‘கைதி நம்பர் 150’ டிரைலர்


தெலுங்கு நடிகர் மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘கைதி நம்பர் 150’. தென்னிந்தியாவில் புகழ்பெற்று விளங்கும் நடிகரான அவர், பிரஜா ராஜ்யம் என்ற கட்சி தொடங்கினார். இதனால் சினிமாவில் இருந்து விலகியே இருந்தார். கடைசியாக 2007ஆம் ஆண்டு வெளியான ‘சங்கர் தாதா சிந்தாபாத்’ என்ற படத்தில் கதாநாயகனாக நடித்திருந்தார். தீவிர அரசியலில் இருந்த அவர், தற்போது மீண்டும் சினிமாவிற்கு திரும்பியுள்ளார்.

அவரது வருகை பிரம்மாண்டமாக இருக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. அதற்காக தமிழில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி, விஜய் நடிப்பில் வெளியான ‘கத்தி’ படத்தை ரீமேக் செய்ய திட்டமிடப்பட்டது. இதையடுத்து வி.வி.விநாயக் இயக்கத்தில், ராம்சரண் தயாரிப்பில், சிரஞ்சீவி நடிப்பில் படம் உருவாகி வருகிறது.

சிரஞ்சீவியின் 150வது படம் என்பதால், படத்திற்கு ’கைதி நம்பர் 150’ என்று பெயரிடப்பட்டுள்ளது. வரும் 11ஆம் தேதி திரைக்கு வரவுள்ள இப்படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது.

official theatrical trailer of Mega Star Chiranjeevi's grand comeback movie Khaidi No 150.

அடுத்த செய்தி

டிரெண்டிங்