ஆப்நகரம்

“வாடி என் தங்கசிலை” பாடலின் வீடியோ இணையதளத்தில் வெளியீடு!

காலா படத்தில் இடம்பெற்ற வாடி என் தங்கசிலை பாடலின் வீடியோ இன்று இணையதளத்தில் வெளியிடப்பட்டது.

Samayam Tamil 11 Jun 2018, 3:26 pm
காலா படத்தில் இடம்பெற்ற வாடி என் தங்கசிலை பாடலின் வீடியோ இன்று இணையதளத்தில் வெளி யிடப்பட்டது.
Samayam Tamil kaala
“வாடி என் தங்கசிலை” பாடலின் வீடியோ இணையதளத்தில் வெளியீடு!


பா.ரஞ்சித் இயக்கத்தில், நடிகர் ரஜினிகாந்த் கூட்டணியில் உருவான காலா படம் கடந்த 7- ம் தேதி வெளியானது. வெளியான முதல் நாளில் 50 கோடி ரூபாய் வசூலை அள்ளிய இப்படம் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.

இதனையடுத்து காலா படத்தில் இடம்பெற்ற கண்ணம்மா பாடலின் வீடியோ, படம் வெளியான முதல் நாளன்று வுண்டர்பார் யூ-டியூப் பக்கத்தில் வெளியிடப்பட்டது. இந்த பாடலை லட்சகணக்கான ரசிகர்கள் இணையத்தில் கண்டு ரசித்து வருகின்றனர். இதில் ரஜினி மற்றும் அவரது முன்னாள் காதலியாக வரும் ஹூமா குரேஷியின் முகபாவனைகள் பார்ப்பவர்களை கிறங்கடித்தன.


இந்த நிலையில் காலா படத்தில் இடம்பெற்ற ‘வாடி என் தங்கசிலை’ பாடலின் வீடியோ இன்று இணையதளத்தில் வெளியிடப்பட்டது. சந்தோஷ் நாரயணன் இசையில் அருண் காமராஜ் எழுதியுள்ள இந்த பாடலை சங்கர் மகாதேவன், பிரதீப் குமார், அனந்து ஆகியோர் இணைந்து பாடியுள்ளனர். இதில் ரஜினி மற்றும் அவரது மனைவியாக வரும் ஈஸ்வரி ராவின் காதல் காட்சிகள் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்