ஆப்நகரம்

‘பாட்ஷா’ படத்திற்கு மீண்டும் இசையமைத்த தேவா!

இசையமைப்பாளர் தேவா ‘பாஷா’ படத்தின் டிஜிட்டல் பதிப்புக்காக மீண்டும் இசையமைத்துள்ளார்.

TNN 28 Dec 2016, 5:35 pm
இசையமைப்பாளர் தேவா ‘பாஷா’ படத்தின் டிஜிட்டல் பதிப்புக்காக மீண்டும் இசையமைத்துள்ளார்.
Samayam Tamil once again deve has composed for baashha
‘பாட்ஷா’ படத்திற்கு மீண்டும் இசையமைத்த தேவா!


ரஜினி நடிப்பில் சத்யா மூவிஸ் தயாரிப்பில், சுரேஷ்கிருஷ்ணா இயக்கத்தில் வெளியான படம்தான் ‘பாஷா’. இந்தப் படம் 1995ல் வெளியானது. ரஜினி நடித்த படங்களிலேயே பெயர் சொல்லும் அளவுக்கு மிகப்பெரிய பெற்றிபெற்றது பாட்ஷா படம்.. சுமார் 21 வருடங்களுக்குப் பிறகு பாட்ஷா படத்தை டிஜிட்டலில் வெளியிட உள்ளனது தயாரிப்பு நிறுவனம் சத்யா மூவீஸ்.

சத்யா மூவிஸ் தொடங்கி 50 ஆண்டுகள் ஆவதையொட்டி ‘பாட்ஷா’ படத்தை மீண்டும் டிஜிட்டலில் வெளியிட முடிவு செய்துள்ளனர். ‘பாட்ஷா’ டிஜிட்டல் வெர்ஷனுக்காக புதிதாக பின்னணி இசையமைத்துள்ளார் இசையமைப்பாளர் தேவா. தற்போது ‘பாட்ஷா’ படத்தை மெருக்கூட்டி 5.1 ஒலி வடிவத்தில் மீண்டும் வெளியிட இருப்பதால், இன்றைய காலத்துக்கு ஏற்ற நவீன இசைக் கருவிகளை வைத்து புதிதாக பின்னணி இசையமைத்துள்ளார் இசையமைப்பாளர் தேவா.

once again deve has composed for baashha

அடுத்த செய்தி

டிரெண்டிங்