ஆப்நகரம்

மீண்டும் மருத்துவக் கல்லூரி மாணவியாக சிருஷ்டி டாங்கே!

நடிகை சிருஷ்டி டாங்கே மீண்டும் மருத்துவக்கல்லூரி மாணவியாக நடித்து வருகிறார்.

TNN 9 Nov 2016, 1:35 pm
சிருஷ்டி டாங்கே தமிழில் கடைசியாக நடித்து வெளிவந்த படம் ‘தர்மதுரை. இந்தப் படத்திற்குப் பிறகு அவர் ராசியான நடிகையாகிவிட்டதாக அவரே கருதுகிறார். அவர் சோலோவாக நடித்த படம் வெற்றி பெறவில்லை. ஆனால், இரண்டு, மூன்று கதாநாயகிகளுள் ஒருவராக நடித்த படங்கள் வெற்றி பெறுகின்றன. அந்த வரிசையில் சீனு ராமசாமி இயக்கத்தில் வந்த ‘தர்மதுரை’படம் வெற்றிபெற்றது. தற்போது சிருஷ்டி டாங்கே, உதயநிதி ஸ்டாலினுடன் இணைந்து ‘சரவணன் இருக்க பயமேன்’என்ற படத்தில் நடித்து வருகிறார்.
Samayam Tamil once again srushti dange as a medical college student
மீண்டும் மருத்துவக் கல்லூரி மாணவியாக சிருஷ்டி டாங்கே!


இந்தப் படத்தில் இவருடன் ரெஜினாவும் நடிக்கிறார். ஆனால், இவர்தான் மெயின் கதாநாயகியாம். அதேபோல், வடிவுடையான் இயக்கிவரும் ‘பொட்டு அம்மன்’படத்தில் பரத்துக்கு ஜோடியாக நடித்துள்ளார். இவருடன் இந்தப் படத்தில் இனியாவும், நமீதாவும் நடித்துள்ளனர். ‘தர்மதுரை’படத்தில் சிருஷ்டி டாங்கே மருத்துவ கல்லூரி மாணவியாக நடித்ததைப்போன்று இந்த படத்திலும் பரத், சிருஷ்டி டாங்கே இருவரும் மருத்துவ கல்லூரியில் படிக்கும் மாணவர்களாக நடித்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஆதலால் இந்தப் படமும் சிருஷ்டி டாங்கேவிற்கு பேசும் படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்