ஆப்நகரம்

நீதிமன்றத்திற்கு மீண்டும் ஒரு முறை நன்றி: கமல் ஹாசன்!

விஷாலுக்கு நீதி கிடைத்ததற்கு நீதிமன்றத்திற்கு மீண்டும் ஒரு முறை நன்றி தெரிவித்துக் கொள்வதாக கமல் ஹாசன் தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 21 Dec 2018, 9:33 pm
விஷாலுக்கு நீதி கிடைத்ததற்கு நீதிமன்றத்திற்கு மீண்டும் ஒரு முறை நன்றி தெரிவித்துக் கொள்வதாக கமல் ஹாசன் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil vi


தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும் தயாரிப்பாளராகவும் இருப்பவர் விஷால். இவர் நடிகர் சங்கத்தில் செயலாளர், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் என பல பதவிகளை வகிக்கிறார்.

இந்நிலையில், நடிகர் விஷால் தலைமையிலான நிர்வாகத்தை கண்டித்து தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தை சேர்ந்த ஒரு பிரிவினர் தயாரிப்பாளர் சங்க அலுவலகத்திற்கு பூட்டு போட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து பூட்டை உடைக்க வந்த விஷால் கைது செய்யப்பட்டார். காலையில் கைதான விஷால் 8 மணிநேரத்திற்குப் பிறகு மாலையில் விடுவிக்கப்பட்டார்.

தொடர்ந்து விஷால் மீது அதிப்ருதியில் உள்ள தயாரிப்பாளர்கள் இணைந்து முதல்வர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்து புகார் அளித்தனர். இதற்கிடையில், தயாரிப்பாளர் சங்க அலுவலகத்தின் பூட்டை பதிவுத்துறை அதிகாரிகள் திறந்தனர். ஆனால், சிறிது நேரத்திலேயே வருவாய்த்துறை அதிகாரிகள் அலுவலகத்திற்கு சீல் வைத்தனர்.

இதையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் விஷால் மேல்முறையீடு செய்துள்ளார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. விசாரணையின் முடிவில், அலுவலகத்தை திறக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த விஷால் கூறுகையில், நியாயம் கிடைத்துள்ளது. எனது நண்பர் வழக்கறிஞர் கிருஷ்ணா நன்றி என்று ஒரே வார்த்தையில் சொல்லிவிட முடியாது. வரவு செலவு கணக்கை யார் வேண்டுமானாலும், வந்து பார்வையிட்டுக் கொள்ளலாம் என்றார். இளையராஜாவை கவுரவப்படுத்தும் நிகழ்ச்சி பிப்ரவரி 2 மற்றும் 3ம் தேதிகளில் நிச்சயம் நடக்கும் என்றார்.

இதற்கிடையில், மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும், நடிகருமான கமல் ஹாசன் கூறுகையில், விஷாலுக்கு நீதி கிடைத்ததற்காக நீதிமன்றத்திற்கு மீண்டுமொருமுறை நன்றி என்று குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்