ஆப்நகரம்

முடிவுக்கு வந்த ‘ஒரு பக்க கதை’ யின் தணிக்கை குழு பிரச்சனை!

நீண்ட நாட்களாக தணிக்கை குழு பிரச்னையில் சிக்கித் தவித்த ‘ஒரு பக்க கதை’ படத்துக்கு ‘யு’ சான்றிதழ் வழங்கியுள்ளனர்.

TNN 16 Sep 2017, 1:55 pm
நீண்ட நாட்களாக தணிக்கை குழு பிரச்னையில் சிக்கித் தவித்த ‘ஒரு பக்க கதை’ படத்துக்கு ‘யு’ சான்றிதழ் வழங்கியுள்ளனர்.
Samayam Tamil oru pakka kathai movie issue solved
முடிவுக்கு வந்த ‘ஒரு பக்க கதை’ யின் தணிக்கை குழு பிரச்சனை!


பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் காளிதாஸ், மேகா ஆகாஷ் உட்பட பலர் நடித்துள்ள படம் ‘ஒரு பக்க கதை’. இந்தப் படத்தை தயாரித்து, இறுதிகட்ட பணிகளையும் முடித்து தணிக்கைக்கு அனுப்பி பல நாட்களாகியும் வெளிவர முடியாமல் தணிக்கை குழுவின் பிரச்னையில் சிக்கி இருந்தது.

அப்படத்தில் நாயகி டாக்டரிடம் பேசும்போது ‘இன்டர்கோர்ஸ்’ என்ற வார்த்தையை பயன்படுத்தி இருக்கிறார். இந்த வார்த்தையை நீக்க வேண்டும் என்று தணிக்கைக் குழுவில் கூறியிருந்தது. அதற்கு படக்குழு மறுப்பு தெரிவித்தது. இதனால் சான்றிதழ் தர தாமதமானது.

மேலும் ‘ஒரு பக்க கதை’ படக்குழு மறுதணிக்கைக்கு விண்ணப்பித்தார்கள். அதில் ‘இன்டர்கோர்ஸ்’ வார்த்தையை அனுமதித்து படத்துக்கு ‘யு’ சான்றிதழ் கொடுத்தார்கள். இதனால் படக்குழு மகிழ்ச்சியடைந்துள்ளது. விரைவில் இந்தப் படம் வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்