லாஸ்ஏஞ்சல்ஸ்: ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா இன்று நடைபெறவுள்ள நிலையில், சிறந்த படதுக்கான விருது லா லா லேண்ட் படத்துக்கு வழங்கப்படுமா அல்லது மூன் லைட் படத்துக்கு வழங்கப்படுமா என்ற எதிர்பாப்பு நிலவுகிறது.
சினிமாத் துறையின் மிக உயரிய விருதாக கருதப்படும் ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவில் இன்று நடைபெறவுள்ளது. அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள டால்பி திரையரங்கில், இந்திய நேரப்படி பிப்ரவரி 27-ம் தேதி (இன்று) காலை 7 மணிக்கு, 89-வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா தொடங்கவுள்ளது.
இதற்காக உலகம் முழுவதும் இருந்து திரைப் பிரபலங்கள் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் குவிந்துள்ளனர். இதில் விருது வழங்குபவர்கள் பெயர் பட்டியலில் பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ராவின் பெயர் இடம்பெற்றிருப்பதால் அவரும் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்திற்கு பறந்துள்ளார்.
இந்த ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டவர்கள் பட்டியல் அண்மையில் வெளியிடப்பட்டது. அதில், சிறந்த படங்களின் பட்டியலில் லா லா லேண்ட், லயன், மான்செஸ்டர் பை தி சீ, மூன்லைட், அரெய்வல், ஃபென்சஸ், ஹாக்சா ரிட்ஜ், ஹெல் ஆர் ஹை வாட்டார், ஹிட்டன் பிகர்ஸ் ஆகிய படங்கள் உள்ளன.
அதேபோல், சிறந்த நடிகர்கள் பட்டியலில் கேஸே அப்லெக், ரயன் கோஸ்லிங், விக்கோ மோர்டென்சென், டென்செல் வாஷிங்டன் ஆகியோரும், சிறந்த நடிகைகளின் பட்டியலில் இஸபெல் ஹப்பெர்ட், ருத் நெக்கா, நடாலி போர்ட்மேன், எம்மா ஸ்டோன், மெரெய்ல் ஸ்டரீப் ஆகியோரும் களத்தில் உள்ளனர்.
இந்நிலையில், சிறந்த படத்துக்கான ஆஸ்கர் விருதை, லா லா லேண்ட் தட்டிச் செல்லுமா அல்லது மூன் லைட் படம் தட்டிச் செல்லுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது.
மொத்தம் 24 பிரிவுகளின் கீழ் ஆஸ்கர் விருதுகள் வழங்கப்பட உள்ள நிலையில், அரெய்வல் படம் 8 பிரிவுகளுக்கும், லா லா லேண்ட் திரைப்படம், 14 பிரிவுகளுக்கும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே, 6 கோல்டன் குளோப் விருதுகளையும் லா லா லேண்ட் திரைப்படம் பெற்றுள்ளது.
அதேபோல், சினிமா உலகிலேயே 4-வது மிகச்சிறந்த படம் என வர்ணிக்கப்படும் மூன் லைட் படமும் களத்தில் உள்ளதால் எந்த படத்துக்கு ஆஸ்கர் விருது கிடைக்கும்? எந்த நடிகர், நடிகை, இசையமைப்பாளருக்கு ஆஸ்கர் விருதுகள் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
Oscar award festival to be held today: Moon light or la la land?