ஆப்நகரம்

LKG Movie: முதல்வராக வரும் ஆர்.ஜே.பாலாஜிக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு!

தனது நடிப்பில் இன்று வெளியாகியுள்ள எல்கேஜி படத்தைப் பார்க்க வந்த ஆர்.ஜே.பாலாஜிக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்துள்ளனர்.

Samayam Tamil 22 Feb 2019, 11:24 am
தனது நடிப்பில் இன்று வெளியாகியுள்ள எல்கேஜி படத்தைப் பார்க்க வந்த ஆர்.ஜே.பாலாஜிக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்துள்ளனர்.
Samayam Tamil balaji


இயக்குனர் கேஆர் பிரபு இயக்கத்தில் ஆர்.ஜே.பாலாஜி, ஜே.கே.ரித்தேஷ், ப்ரியா ஆனந்த், நாஞ்சில் சம்பத் ஆகியோர் பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் எல்.கே.ஜி. முழுக்க முழுக்க அரசியல் கட்சிகளை விமர்சிக்கும் வகையில், உருவாக்கப்பட்டுள்ள இப்படம் கண்டிப்பாக ஆர்ஜே பாலாஜிக்கு திருப்பு முனையை ஏற்படுத்தும் வகையில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Also Read This: LKG Movie: கவுன்சிலரா இருந்து ஆட்சியை பிடித்த ஆர்ஜே பாலாஜியின் அரசியல் பின்னணி!

Also Read This:எல்கேஜி சினிமா விமர்சனம்


லால்குடி என்ற பகுதியில் கவுன்சிலராக இருக்கும் ஆர்ஜே பாலாஜி எப்படி மாநிலத்தின் முதல்வராகிறார் என்பது தான் இப்படத்தின் கரு. இதில், ஆர்ஜே பாலாஜிக்கு உதவி செய்யும் ஹீரோயின் ப்ரியா ஆனந்த்.

இந்த நிலையில், இன்று வெளியாகியுள்ள எல்கேஜி படத்தைப் பார்ப்பதற்கு காலை 5 மணிக்கு சென்னை கோயம்பேட்டில் உள்ள ரோகிணி திரையரங்கிற்கு வந்த படத்தில் முதல்வராக வரும் ஆர்ஜே பாலாஜிக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்துள்ளனர். அவருடன் படத்தில் நடித்திருந்த அவரது அப்பா நாஞ்சில் சம்பத், ப்ரியா ஆனந்த் ஆகியோரும் வந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்