ஆப்நகரம்

புதிய படத்தில் இணையும் ஓவியா மற்றும் சினேகன்!

இசையமைப்பாளர் சி.சத்யா தயாரிக்கும் படத்தில் நடிகை ஓவியாவும், பாடலாசிரியர் சினேகனும் நடிக்கவுள்ளனர்.

TNN 14 Oct 2017, 3:24 pm
இசையமைப்பாளர் சி.சத்யா தயாரிக்கும் படத்தில் நடிகை ஓவியாவும், பாடலாசிரியர் சினேகனும் நடிக்கவுள்ளனர்.
Samayam Tamil oviya and snehan will together play role in a new movie
புதிய படத்தில் இணையும் ஓவியா மற்றும் சினேகன்!


பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்தவர்கள் நடிகை ஓவியா மற்றும் பாடலாசிரியர் சினேகன். இந்த நிகழ்ச்சி மூலம் அதிக ரசிகர்களை கவந்தவர் நடிகை ஓவியா. பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பின்னர் நடிகை ஒவியாவுக்கு விளம்பர படங்கள் மற்றும் திரைப்படங்கள் என வாய்ப்புகள் குவிந்த வண்ணம் இருக்கின்றன. ராகவா லாரன்ஸ் இயக்கி நடிக்கும் ‘காஞ்சனா 3’ படத்தில் நடிகை ஓவியா நடித்து வருகிறார்.

இந்நிலையில் சினேகனையும், ஓவியாவையும் வைத்து ஒரு படத்தை தயாரிக்க முடிவு செய்துள்ளார் இசை அமைப்பாளர் சி.சத்யா. இசையமைப்பாளராக இருந்த சத்யா, முதல் முறையாக இந்த படம் மூலம் தயாரிப்பாளராக அவதாரம் எடுக்க உள்ளார்.

இந்த புதிய படத்தை இயக்குவது யார், இதில் நடிக்கவுள்ளார்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் யார், யார் குறித்த விவரங்கள் விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்