ஆப்நகரம்

ஒருவழியாக ஆரவ் உடன் கைகோர்த்த ஓவியா!

ஆரவ் ஹீரோவாக அறிமுகமாகும் ராஜபீமா படத்தில், ஓவியா கவுரவ தோற்றத்தில் நடிக்கும் தகவல் வெளியாகியுள்ளது.

Samayam Tamil 14 Dec 2018, 1:37 pm
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 1 நிகழ்ச்சி, அனைவரது மத்தியிலும் மிகுந்த வரவேற்பை பெற்றது. அதிலும் குறிப்பாக ஓவியா- ஆரவ் காதல் விவகாரம்,மருத்துவ முத்தம் மிகப்பெரிய அளவில் பிரபலமானது. இந்த நிகழ்ச்சிக்கு பிறகு ஓவியா, ஆரவின் நெருங்கி தோழியாக மாறினார்.
Samayam Tamil ஒருவழியாக ஆரவ் உடன் கைகோர்த்த ஓவியா!
ஒருவழியாக ஆரவ் உடன் கைகோர்த்த ஓவியா!


இதையடுத்து இருவரும் இணைந்து ஏதேனும் ஒரு படத்தில் நடிப்பார்களா என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். அது இப்போது நடந்துவிட்டது, ஆரவ், ஹீரோவாக அறிமுகமாகும் ராஜபீமா படத்தில் ஓவியா ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார்.


இதுகுறித்து ஆரவ் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறுகையில், ஒரே ஒரு பாடலுக்கு இருவரும் இணைந்து நடனமாடி இருக்கிறோம். ஓவியா ஆர்மிக்கு இது ஒரு நல்ல செய்தி. தயாராகுங்கள் என குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு பதிலளித்த ஓவியா, உன்னுடன் இணைந்து நடித்ததில் எனக்கு மகிழ்ச்சி ஆரவ்” என்று கூறியிருக்கிறார். இதனால் இருவரது ரசிகர்களும் உற்சாகத்தில் இருக்கின்றனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்