ஆப்நகரம்

ஓவியாவுடன் விரைவில் இணையவுள்ள ஆரவ்!

விரைவில் ஒரு படத்தில் ஓவியா , ஆரவ் ஜோடி சேரவுள்ளதாக கூறப்படுகிறது.

TOI Contributor 4 Oct 2017, 2:08 pm
விரைவில் ஒரு படத்தில் ஓவியா , ஆரவ் ஜோடி சேரவுள்ளதாக கூறப்படுகிறது.
Samayam Tamil oviya will act with arav in tamil film
ஓவியாவுடன் விரைவில் இணையவுள்ள ஆரவ்!


பிக்பாஸ் வீட்டில் நடிகை ஓவியா, ஆரவ்வை கண்மூடித்தனமாக காதலித்து வந்தார். நிகழ்ச்சியைப் பார்த்த மக்களுக்கும் ஆரவ்வுடன் ஓவியாவை காதலிப்பதாக தெரிந்தது. ஒரு கட்டத்தில், ஓவியாவின் காதலை, ஆரவ் நிராகரித்தார். இதனால் நடிகை ஓவியா மனநிலையில் மாற்றம் ஏற்பட்டது. இதனால் பிக்பாஸ் வீட்டை விட்டே தானாகவே வெளியேறினார்.

இதனால் ஓவியா ஆர்மி, ஓவியா படையினர்களின் வெறுப்பை சம்பாதித்த ஆரவ், பிக்பாஸ் வீட்டில் இருந்து விரைவில் வெளியேற்றபடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அனைவரின் எதிர்பார்ப்பையும் மீறி ஆரவ் இறுதி வரை சென்று பிக்பாஸ் பரிசையும் தட்டி சென்றார்.

இந்த நிலையில் ஆரவ், சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், ‘‘ஓவியாவுடன் தொடர்ந்து நட்புடன் இருக்க தயார். ஓவியாவுக்கு சம்மதம் என்றால் அவருடன் இணைந்து நடிக்கவும் தயார்’’ என்றும் கூறியுள்ளார். விரைவில் ஒரு படத்தில் ஆரவ் & ஓவியா ஜோடியாக நடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

Oviya will act with Arav in film!!

அடுத்த செய்தி

டிரெண்டிங்