ஆப்நகரம்

விநியோகஸ்தரை பாதாள குழியில் தள்ளிய நடிகை ஓவியா!

நடிகை ஓவியா நடிப்பில் வெளியான ‘90எம்.எல்.’ படத்தால் விநியோகஸ்தர் தற்பேது பாதாள குழியில் சிக்கிக் கொண்டார்.

Samayam Tamil 9 Mar 2019, 1:40 pm
கோலிவுட் சினிமாவில் முக்கிய நடிகையாக இருப்பவர் நடிகை ஓவியா. இவர் பல படங்களிலும் நடித்திருந்தாலும், பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகுதான் எல்லோருக்கும் பரீட்சையமானார். ரசிகர்களிடம் நல்ல பெயரை சம்பாதித்த வைத்திருந்த நடிகை ஓவியா, தற்போது வெளியான ‘90எம்.எல்.’ படத்தின் மூலம் அதை கோட்டை விட்டுவிட்டார். இந்தப் படத்தை அனிதா உதீப் என்பவர் இயக்கியிருந்தார்.
Samayam Tamil oviya


இந்தப் படத்தில் நடித்துள்ள ஓவியாவை நெகடீவ் விமர்சனங்களை கொண்டு வருத்தெடுத்து வருகின்றனர் நெட்டிசன்ஸ். அந்த அளவிற்கு ஓவியா இந்தப்படத்தில் புகைபிடிப்பது , தண்ணி அடிப்பது, கஞ்சா அடிப்பது , லிப் லாக் என்று அத்தனை மோசமான காரியங்களையும் செய்து அதை பெஃமினிசம் என்று சொல்லி ரசிகர்களின் வெறுப்புக்குள்ளாகியுள்ளார்.

இந்நிலையில் இந்த படத்தின் தமிழக திரையரங்கு உரிமையை 8 கோடிக்கு வாங்கிய டிரைடண்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரன் என்ற விநியோகஸ்தருக்கு சுமார் 5 கோடி நஷ்டம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்