ஆப்நகரம்

விஜய்யை வைத்து சூப்பர் ஹிட் படத்தை ரீமேக் செய்யும் பிரபல இயக்குநர்?

நடிகன் படத்தை விஜய்யை வைத்து ரீமேக் செய்ய விரும்புகிறாராம் பி. வாசு.

Samayam Tamil 25 Nov 2020, 3:23 pm
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி உள்ளிட்டோர் நடித்துள்ள மாஸ்டர் படத்தின் ரிலீஸுக்கு தான் அனைவரும் காத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் விஜய்யின் அடுத்த படத்தை இயக்கப் போவது யார் என்று பேச்சாக உள்ளது.
Samayam Tamil vijay


இந்நிலையில் பி. வாசு விஜய்யை வைத்து படம் பண்ணப் போவதாக கூறப்படுகிறது. பி. வாசு இயக்கத்தில் சத்யராஜ், குஷ்பு, மனோரமா, கவுண்டமணி உள்ளிட்டோர் நடித்த நடிகன் படம் கடந்த 1990ம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்றது. அந்த படத்தை தான் விஜய்யை வைத்து ரீமேக் செய்ய விரும்புகிறாராம் பி. வாசு.

காமெடி படங்களில் நடிப்பது விஜய்க்கு சவாலான விஷயம் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது. விஜய்யை வைத்து படம் பண்ண வேண்டும் என்பது பி. வாசுவின் நீண்ட கால ஆசையாகும். வாசுவின் ஆசையை விஜய் நிறைவேற்றி வைப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

நண்பன் படத்திற்கு பிறகு விஜய் ரீமேக் படங்களில் நடிக்கவில்லை. ஷங்கர் இயக்கிய நண்பன் ஆமீர் கான், மாதவன் உள்ளிட்டோர் நடித்த 3 இடியட்ஸ் இந்தி படத்தின் ரீமேக் ஆகும்.

கதை ரொம்ப பிடிச்சிருச்சு, தளபதி 65 இயக்குநரை ஓகே பண்ண விஜய்?

தளபதி 65 படத்தை இயக்குவதாக இருந்த ஏ.ஆர். முருகதாஸ் அந்த படத்தில் இருந்து விலகினார். அதன் பிறகு விஜய் பல இயக்குநர்களிடம் கதை கேட்டு வருகிறாராம். இந்நிலையில் கோலமாவு கோகிலா படம் புகழ் இயக்குநர் நெல்சன் திலீப்குமார் சொன்ன காமெடி கதை விஜய்க்கு பிடித்துவிட்டது என்று கூறப்படுகிறது. அதனால் தளபதி 65 படத்தை நெல்சன் திலீப்குமார் தான் இயக்கக்கூடும் என்று பேச்சு கிளம்பியுள்ளது.

இந்நிலையில் வாசுவின் பெயரும் அடிபடுகிறது. இதற்கிடையே எஸ்.ஜே. சூர்யா விஜய்யை சந்தித்து கதை சொன்னதாகவும் தகவல் வெளியானது. தளபதி 65 படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படத்தை இயக்கப் போவது யார் என்று சன் பிக்சர்ஸ் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடும் வரை யார் பெயராவது அடிபட்டுக் கொண்டு தான் இருக்கும்.

இதற்கிடையே விஜய்யை வைத்து இரண்டு படங்களை இயக்கிய ஒருவரும் அவருடன் மீண்டும் சேர்ந்து படம் பண்ண ஆசையில் காத்துக் கொண்டிருக்கிறாராம். ஆனால் அவர் படத்தில் நடிக்க வேண்டாம் என்று ரசிகர்களே விஜய்யிடம் கோரிக்கை விடுத்துள்ளார்களாம்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்