ஆப்நகரம்

அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியாகும் சார்பட்டா பரம்பரை: வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் உருவாகியிருக்கும் 'சார்பட்டா பரம்பரை' திரைப்படம் வரும் ஜூலை 22-ஆம் தேதி அமேசான் பிரைம் தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 8 Jul 2021, 4:22 pm
பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் சார்பட்டா பரம்பரை. பாக்சிங்கை மையமாக வைத்து இந்த திரைப்படம் உருவாகியுள்ளது. ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸுடன் இணைந்து கே9 ஸ்டுடியோஸ் இந்த படத்தை தயாரித்துள்ளது. இந்நிலையில் இந்தப்படம் வருகின்ற ஜூலை 22-ஆம் தேதி அமேசான் பிரைம் தளத்தில் வெளியாகும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Samayam Tamil Sarpatta_Parambarai
Sarpatta_Parambarai


அட்ட்கத்தி, மெட்ராஸ், கபாலி, காலா திரைப்படங்களை தொடர்ந்து தற்போது சார்பட்டா பரம்பரை திரைப்படத்தை இயக்கி வருகிறார் ரஞ்சித். சார்பட்டாவில் பாக்ஸிங் வீரராக ஆர்யா நடிக்கிறார். இந்த படத்தில் முக்கியமான வேடத்தில் பசுபதி, அனுபாமா குமார், சஞ்சனா நடராஜன், சந்தோஷ் பிரதீப் ஆகியோரும் நடித்துள்ளனர். ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸுடன் இணைந்து கே9 ஸ்டுடியோஸ் இந்த படத்தை தயாரித்துள்ளனர்.

வடசென்னையில் எண்பதுகளில் பிரபலமாக இருந்த குத்துச் சண்டை அணிகளைப் பற்றி அடிப்படையாக கொண்டு இந்தப்படம் உருவாகியுள்ளது. சார்பட்டா பரம்பரை, இடியப்ப பரம்பரை என இரண்டு அணிகள் குத்துச் சண்டையில் மோதுவதை அடிப்படையாக கொண்டு இந்தப்படம் எடுக்கப்பட்டுள்ளது. தனது 30 வது திரைப்படத்திற்காக மிக கடுமையான உடற்பயிற்சிகள் செய்து உடலை கட்டுகோப்பாக வைத்துள்ளார் ஆர்யா.

தெலுங்கில் ரீமேக்காகும் மலையாள ஹிட் படம்: ஹீரோவாக அறிமுகமாகும் அர்ஜுன் தாஸ்!
இந்த படத்தின் படப்பிடிப்பு, இறுதிக்கட்டப் பணிகள் என அனைத்தும் முடிவடைந்து வெளியீட்டுக்குத் தயாராகவுள்ளது. இந்தப் படத்தின் வெளியீட்டு உரிமையை மிகப்பெரிய தொகையை கொடுத்து அமேசான் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இந்நிலையில் ஜூலை 22-ஆம் தேதி அமேசான் பிரைம் தளத்தில் இந்த படம் வெளியாகும் என அறிவித்துள்ளது படக்குழு.


கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் குறைந்து வருவதால் விரைவில் திரையரங்குகள் திறக்கப்படும் என எதிர்பார்க்கபடுகிறது. இந்நிலையில் திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட திரைப்படங்கள் ஓடிடி நோக்கி நகர்ந்து வருவதால் ரசிகர்கள் பெரும் ஏமாற்றத்தில் உள்ளனர். ஏற்கனவே ஆர்யா, சாயிஷா நடிப்பில் உருவான டெடி திரைப்படமும் ஓடிடியில் வெளியானது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்