ஆப்நகரம்

திலீப் விவகாரம்: மோகன்லாலை குறி வைத்த நடிகை பத்மபிரியா!

மலையாள நடிகர் சங்கத் தேர்தலில் பார்வதியை போட்டியிட அனுமதிக்கவில்லை என்றும், சங்கம் நடிகைகளுக்கு எதிராக செயல்படுகிறது என்றும் நடிகை பத்மப்ரியா குற்றம் சாட்டியுள்ளார்.

Samayam Tamil 10 Jul 2018, 5:59 pm

ஹைலைட்ஸ்:

மலையாள நடிகர் சங்கத் தேர்தலில் பார்வதியை போட்டியிட அனுமதிக்கவில்லை என்றும், சங்கம் நடிகைகளுக்கு எதிராக செயல்படுகிறது என்றும் நடிகை பத்மப்ரியா குற்றம் சாட்டியுள்ளார்.
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil padma
மலையாள நடிகர் சங்கத் தேர்தலில் பார்வதியை போட்டியிட அனுமதிக்கவில்லை என்றும், சங்கம் நடிகைகளுக்கு எதிராக செயல்படுகிறது என்றும் நடிகை பத்மப்ரியா குற்றம் சாட்டியுள்ளார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு, மலையாள சினிமாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது பிரபல நடிகை கடத்தப்பட்டது தான். இந்த வழக்கில் நடிகர் திலீப் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில், மலையாள நடிகர் சங்கத்திற்கு புதிய தலைவராக மோகன்லால் பொறுப்பேற்றார். இதையடுத்து, அவரது முதல் வேலையாக நடிகை கடத்தல் வழக்கில் சிக்கி சங்கத்திலிருந்து நீக்கி வைக்கப்பட்ட திலீப்பை மீண்டும் நடிகர் சங்கத்தில் சேர்த்தார்.

இது, மலையாள சினிமாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. சங்கத்தில் நடிகர் திலீப் சேர்க்கப்பட்டதைக் கண்டித்து ரம்யா நம்பீசன், கீது மோகந்தாஸ், ரீமா கல்லிங்கல் மற்றும் கடத்தலால் பாதிக்கப்பட்ட நடிகை ஆகிய 4 பேரும் சங்க உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ளனர். இவர்களைத் தொடர்ந்து மேலும், 14 நடிகைகள் சங்க முடிவை கண்டித்தனர். கேரள மகளிர் ஆணையமும் மோகன்லால் முடிவை விமர்சித்தது.

கேரள நடிகர் சங்கத்தில் திலீப் மீண்டும் சேர்க்கப்பட்டது ஏன்? மோகன்லால் விளக்கம்!

தற்போது இந்த விவகாரத்தால், மலையாள நடிகர் சங்கத்தில் மோதல் ஏற்பட்டுள்ளது. எதிர்ப்பாளர்கள் இணைந்து புதிய சங்கத்தை தொடங்க முடிவு எடுத்துள்ளனர். நடிகரும், இயக்குனருமான ஆஷி அபு, ராஜீவ் ரவி ஆகியோர் இந்த போட்டி சங்கத்துக்கு தலைமை வகிக்கின்றனர். இதற்கு, திலீப்பின் முன்னாள் மனைவி மஞ்சு வாரியர் தலைமையில் செயல்படும் சினிமா பெண்கள் கூட்டுக்குழுவும் இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளது.

தற்போது ஆஷி அபு வெளிநாட்டில் இருப்பதால், அவர் திருவனந்தபுரம் திரும்பிய பிறகு புதிய சங்கம் பற்றிய அறிவிப்பு வெளியாகும் என்று மூத்த நடிகர் ஒருவர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், இது குறித்து மோகன்லால் கூறுகையில், திலீப்பை நடிகர் சங்கத்தில் சேர்ப்பது குறித்து பொதுக்குழுவில் தீர்மானம் வைக்கப்பட்டிருந்தது. பாதிக்கப்பட்ட நடிகை மற்றும் ரம்யா நம்பீசன் ஆகியோரது ராஜினாமா கடிதம் மட்டுமே எங்களுக்கு வந்து சேர்ந்தது. அடுத்து பொதுக்குழு எப்போ கூட்டப்படுகிறதோ அப்போது தான், அவர்களை சேர்ப்பது குறித்து முடிவு செய்யப்படும் என்றார்.

மேலும், மீண்டும் பொதுக்குழு கூட்டப்படுவது குறித்து நடிகைகளிடம் பரிசீலிக்கப்படும். தற்போது, திலீப் நடிகர் சங்கத்தில் இல்லவே இல்லை. அவரை சங்கத்தில் சேர்த்ததையடுத்து, சங்கத்தில் பிளவு ஏற்பட்ட போது நான் அமைதியாக இருந்ததற்கு மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகர் சங்கத்தில் திலீப் இல்லை: பகிரங்கமாக மன்னிப்புக் கேட்ட மோகன்லால்!

இதற்கிடையில், மோகன்லாலின் கருத்துக்கு நடிகை பத்மப்ரியா எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், மலையாள நடிகர் சங்கத்தில் ஜனநாயகம் இல்லை. நடிகைகளுக்கு எதிராகத்தான் இந்த சங்கம் செயல்படுகிறது. சங்க தேர்தலில் பார்வதி போட்டியிட முடிவு செய்த போது, அவருக்கு எதிர்ப்புகள் கிளம்பியது. நடிகர் திலீப்பை மீண்டும் சங்கத்தில் சேர்ப்பது பற்றி எந்த தகவலும் அஜந்தாவில் தெரிவிக்கப்படவில்லை.

4 நடிகைகள் தங்களது ராஜினாமா கடிதத்தை கொடுத்துள்ள நிலையில், வெறும் 2 நடிகைகளின் ராஜினாமா மட்டும் கிடைத்துள்ளது என்று ஏன் கூறுகிறார் என்பது இன்னும் தெரியவில்லை என்று கூறியுள்ளார்.

இதற்கு நடிகர் சங்க பொதுச்செயலாளர் பாபு மறுத்துள்ளார். பத்மப்ரியாவின் குற்றச்சாட்டு தவறானது என்றும், அவர் தேர்தலில் போட்டியிடுவதை தான் தடுக்கவில்லை என்றும் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்