ஆப்நகரம்

பத்மாவதி’ படத்தை வெளியிட மாநில அரசு தடை!

‘பத்மாவதி’ படத்தை வெளியிட குஜராத் மாநில அரசு தடைவிதித்துள்ளது.

Samayam Tamil 23 Nov 2017, 4:40 pm
‘பத்மாவதி’ படத்தை வெளியிட குஜராத் மாநில அரசு தடைவிதித்துள்ளது.
Samayam Tamil padmavathi movie banned all over the state
பத்மாவதி’ படத்தை வெளியிட மாநில அரசு தடை!


பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ள இந்தி படமான ‘பத்மாவதி’ யை வெளியிட குஜராத்மாநில அரசு தடை விதித்துள்ளது. ‘பத்மாவதி’ படத்தை சஞ்சய் லீலா பன்சாலிஇயக்கியுள்ளார். இந்தப் படத்தின் நாயகியாக நடிகை தீபிகா படுகோனே நடித்துள்ளார்.

பழங்கால கவிதையில் குறிப்பிடப்பட்டுள்ள ராணி பத்மினியின் கதாபாத்திரத்தைத் தழுவிஎடுக்கப்பட்டுள்ள இந்தத் திரைப்படமானது டிசம்பர் 1-ஆம் தேதி திரைக்கு வருவதாகஇருந்தது. ஆனால், இந்தத் திரைப்படத்தில் ராணி பத்மாவதி தரக்குறைவாகசித்திரிக்கப்பட்டதாகக் கூறி வட மாநிலங்களில் ராஜபுத்திர சமூகத்தினரும், பாஜகவினரும்பெரிய அளவில் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ள பத்மாவதி திரைப்படத்தை குஜராத்தில்வெளியிட அம்மாநில அரசு தடை விதித்துள்ளது. இதுதொடர்பான அறிவிக்கையையும் குஜராத்அரசு வெளியிட்டது.
இதனிடையே, ‘பத்மாவதி’ சம்பந்தப்பட்ட விவகாரம் தொடர்பாக பரிசீலித்து வரும்மக்களவைக் குழு, அத்திரைப்படம் குறித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு மத்திய செய்தி - ஒலிபரப்புத் துறை அமைச்சகத்தையும், தணிக்கை வாரியத்தையும் கேட்டுக்கொண்டுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்