ஆப்நகரம்

பரியேறும் பெருமாள் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் கதிர், ஆனந்தி நடிப்பில் உருவாகியுள்ள பரியேறும் பெருமாள் திரைப்படம் வருகிற செப்டம்பர் 28ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 2 Sep 2018, 4:15 pm
இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் கதிர், ஆனந்தி நடிப்பில் உருவாகியுள்ள பரியேறும் பெருமாள் திரைப்படம் வருகிற செப்டம்பர் 28ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil pa 5
பரியேறும் பெருமாள் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!


“தாமிரபரணியில் கொல்லப்படாதவர்கள்” என்ற சிறுகதைத் தொகுப்பின் மூலம் தமிழ் எழுத்துலகில் கவனம் ஈர்த்தவர் எழுத்தாளர் மாரி செல்வராஜ். இயக்குநர் ராமின் உதவி இயக்குநராக பணிபுரிந்த இவர், எழுதி இயக்கியுள்ள படம் பரியேறும் பெருமாள்.

அட்டகத்தி, மெட்ராஸ், கபாலி உள்ளிட்ட படங்கள் மூலம் சிறந்த இயக்குநராகத் தன்னை முன்னிறுத்திக் கொண்ட இயக்குநர் பா.இரஞ்சித், தனது `நீலம்’ தயாரிப்பு நிறுவனத்தின் முதல் படைப்பாக`பரியேறும் பெருமாள்’ படத்தை தயாரித்துள்ளார்.

கதிர், ஆனந்தி, யோகி பாபு, மாரிமுத்து, லிஜீஷ், உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு, சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார். ஸ்ரீதர் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இந்நிலையில் பரியேறும் பெருமாள் படத்தின் இசை வெளியீடு செப்டம்பர் 5-ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து செப்டம்பர் 28-ஆம் தேதி படம் வெளியாக இருப்பதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்