ஆப்நகரம்

கொரோனா தடுப்பூசி போட்டு கண், காது, முகம் வீங்கிவிட்டது: பார்த்திபன்

இரண்டாம் தவனை கோவிட்டுக்கான தடுப்பூசி எடுத்துக் கொண்ட பார்த்திபனுக்கு ஒவ்வாமையால் கண், காது, முகம் எல்லாம் வீங்கிவிட்டதாம். அதனால் தான் ஓட்டு போட முடியவில்லையாம்.

Samayam Tamil 7 Apr 2021, 9:31 am
மற்றவர்களை எல்லாம் கட்டாயம் வாக்களிக்கச் சொன்ன தான் வாக்களிக்காததற்கான காரணத்தை ட்விட்டரில் தெரிவித்துள்ளார் பார்த்திபன்.
Samayam Tamil parthiban didnt cast vote for this reason
கொரோனா தடுப்பூசி போட்டு கண், காது, முகம் வீங்கிவிட்டது: பார்த்திபன்


தேர்தல்

தமிழக சட்டசபை தேர்தல் நேற்று நடந்தது. திரையுலகை சேர்ந்தவர்கள் காலையிலேயே வந்து ஓட்டு போட்டார்கள். ரஜினி தனியாக வந்து வாக்களித்தார். கமல் தன் மகள்களுடன் வந்தார். அஜித் தன் மனைவியுடன் வந்தார். வந்த இடத்தில் செல்ஃபி எடுக்க முயன்ற ரசிகரின் செல்போனை பறித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. விஜய் சைக்கிளில் வந்து வாக்களித்தார். விக்ரம் தன் வீட்டில் இருந்து நடந்து வந்து ஓட்டு போட்டார். சிவகார்த்திகேயன் தன் மனைவியுடன் வந்து வாக்களித்தார். ஆனால் வாக்களிப்பது குறித்து தொடர்ந்து ட்வீட் செய்த பார்த்திபன் வாக்களிக்கவில்லை.

வாக்கு

ஏப்- 1 - ஐ

6-க்கு ஒத்தி வைக்காமல்

'ஆறு"தல் பிச்சைக்கு கை நீட்டாமல்

நல்லாட்சிக்கு விரல் நீட்டுவோம்,

King- maker-ராக!

ஆறு என்பது நாட்டின் வளம்!இரு

கரைகளையும் உடைத்து வரையின்றி பாய்ச்சி எல்லோரும் எல்லாமும் பெற உரியதைத் தேர்ந்தெடுப்போம்!

நாளை என்பது ஒரே ஒரு நாள் அல்ல...

ஐந்தாண்டு கால குத்தகை! பொத்தானில் குத்துகையில் கவனம் கொள்வோம் என்று வாக்களிப்பது குறித்து ட்வீட் செய்தார் பார்த்திபன்.

பார்த்திபன்

நம்மை எல்லாம் ஓட்டு போடச் சொன்ன பார்த்திபன் ஏன் ஓட்டு போடவில்லை என்று பலரும் வியந்தனர். இந்நிலையில் அவர் ட்விட்டரில் இன்று கூறியிருப்பதாவது, வணக்கமும் நன்றியும்! ஜனநாயக கடமையை சீராக செய்த

சிறப்பானவர்களுக்கு!

வருத்தமும், இயலாமையும்.

இரண்டாம் தவனை COVID-க்கான தடுப்பூசி எடுத்துக் கொண்ட எனக்கு திடீரென ஏற்பட்ட ஒவ்வாமையில் கண் காது முகம் முழுவதும் வீங்கிவிட்டது டாக்டருக்குக் போட்டோ அனுப்பியே மருத்துவம் செய்துக்கொண்டேன் எனவே என தெரிவித்துள்ளார்.

Twitter-Radhakrishnan Parthiban

தடுப்பூசி

தடுப்பூசி அவசியம் எடுத்துக்கொள்ள வேண்டும். மிகச் சிலருக்கு மட்டுமே இது போன்ற reactions.அதுவும் எனக்கு ஏற்கனவே allergy issues இருந்ததால் மட்டுமே trigger ஆனது. என் வருத்தம் அது நேற்றாகிப் போனதில்...என பார்த்திபன் மேலும் தெரிவித்துள்ளார். பார்த்திபனின் ட்வீட்டை பார்த்தவர்கள் கூறியிருப்பதாவது, உடம்பை பார்த்துக்கொள்ளுங்கள் சார். தடுப்பூசி போட்ட எத்தனையோ பேர் நன்றாக இருக்கிறார்கள். பொய்யான தகவலை பரப்ப வேண்டாம். தடுப்பூசி போடலாமோ என்று யோசித்த நேரத்தில் உங்களின் ட்வீட்டை பார்த்த பிறகு பயமாக இருக்கிறது என தெரிவித்துள்ளனர்.

Twitter-Radhakrishnan Parthiban

அடுத்த செய்தி

டிரெண்டிங்