ஆப்நகரம்

மீண்டும் இணையும் பார்த்திபன் - வடிவேலு கூட்டணி!

சுராஜ் இயக்கத்தில் விமல் நடிக்கும் புதிய படத்தில் பார்த்திபனும், வடிவேலுவும் இணைந்து நடிக்கின்றனர்.

Samayam Tamil 28 Jun 2018, 3:14 pm
சுராஜ் இயக்கத்தில் விமல் நடிக்கும் புதிய படத்தில் பார்த்திபனும், வடிவேலுவும் இணைந்து நடிக்கின்றனர்.
Samayam Tamil vadivelu


‘மன்னர் வகையறா’ படத்தை அடுத்து நடிகர் விமல் தற்போது ‘கன்னிராசி’, ‘களவாணி 2’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். மேலும் எழில் இயக்கத்திலும் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை முடித்த பிறகு அடுத்ததாக சுராஜ் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தில் விமலுடன் நடிகர் வடிவேலுவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் விமல் - வடிவேலு இருவரும் போலீசாக நடிக்கின்றனர்.

இந்த நிலையில், நடிகர் பார்த்திபனும் இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்