ஆப்நகரம்

மாவீரன் கிட்டு தேசிய விருது பெறும்: ரா.பார்த்திபன் உறுதி

'மாவீரன் கிட்டு' திரைப்படம் பல தேசிய விருதுகளை பெறும் என அப்படத்தில் நடித்துள்ள இயக்குநர் ரா.பார்த்திபன் கருத்து தெரிவித்துள்ளார்.

TNN 2 Oct 2016, 3:03 pm
சுசீந்திரன் இயக்கத்தில் விஷ்ணு விஷால்,ஸ்ரீவித்யா மற்றும் இயக்குநர் ரா.பார்த்திபன் நடித்துள்ள ‘மாவீரன் கிட்டு’ திரைப்படத்தின் டீசர் நேற்று வெளியிடப்பட்டது.
Samayam Tamil parthipan hopes maaveeran kittu get national awards
மாவீரன் கிட்டு தேசிய விருது பெறும்: ரா.பார்த்திபன் உறுதி


நேற்று சென்னையில் நடைபெற்ற டீசர் வெளியீட்டு விழாவில் பேசிய பார்த்திபன்,”மாவீரன் கிட்டு திரைப்படத்தில் எனக்கு நல்ல கதாபாத்திரம் கிடைத்துள்ளது.ஹவுஸ் புல் படத்திற்கு அடுத்ததாக நான் மன நிறைவுடன் நடித்த படம் இது.அழகி,ஆயிரத்தில் ஒருவன் படங்களைப் போல ‘மாவீரன் கிட்டு’ திரைப்படமும் எனக்கு நல்ல பெயரை வாங்கித் தரும்.கண்டிப்பாக இந்த திரைப்படத்திற்கு பல தேசிய விருதுகள் கிடைக்கும்.” என பேசினார்.

படத்தின் இயக்குநரான சுசீந்திரனும் அழகர் சாமியின் குதிரை திரைப்படத்திற்கு பிறகு மாவீரன் கிட்டு எனக்கு தேசிய விருதை பெற்றுத் தரும் என நம்புவதாக தெரிவித்தார்.

English Summary:

Parthipan hopes national awards for his upcoming movie 'Maaveeran Kittu'

அடுத்த செய்தி

டிரெண்டிங்