ஆப்நகரம்

ஓ, இதற்குத் தான் பிக் பாஸ் கொண்டாட்டம் நடத்தப்பட்டதா, பேஷ் பேஷ்

பிக் பாஸ் கொண்டாட்டம் பற்றி மக்கள் வேறு மாதிரியாக பேசத் துவங்கிவிட்டார்கள்.

Samayam Tamil 5 Nov 2019, 8:56 am
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்பவர்களை பார்வையாளர்கள் சமூக வலைதளங்களில் விமர்சிப்பது முதல் சீசனில் இருந்து நடந்து வருகிறது.
Samayam Tamil kavin


இந்த சீசனில் கலந்து கொண்டவர்களில் கவின், லோஸ்லியா, வனிதா, சேரன் ஆகியோரை நெட்டிசன்கள் கண்டமேனிக்கு கலாய்த்துவிட்டனர். மேலும் ஒரு சில போட்டியாளர்களின் கேரக்டரை பற்றி தவறாக பேசப்பட்டது.

நம்ம கேட்க நினைத்த 'அதே' கேள்வியை கேட்டு வனிதாவை கட்டையால் அடித்த தர்ஷன்

போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டில் நடந்து கொண்ட விதத்தை பார்த்து அவர்களை சமூக வலைதளங்களில் விளாசினார்கள். கவின், லோஸ்லியா இடையே ஏற்பட்ட ஸ்க்ரிப்ட் காதல் குறித்து தான் அதிகமாக பேசப்பட்டது.

பாவம் பல கனவுகளுடன் இலங்கையில் இருந்து வந்த லோஸ்லியாவின் பெயர் கெட்டது தான் மிச்சம். இந்நிலையில் நடந்த பிக் பாஸ் கொண்டாட்டம் நிகழ்ச்சியில் அவர்களின் பெயரை காப்பாற்ற பல முயற்சிகள் செய்துள்ளனர்.

அம்மாவுக்கே அம்மா ஆன லோஸ்லியா: அப்போ, பிக் பாஸ் வீட்டில் ஏன் அப்படி...

போட்டியாளர்களை அவர்களின் குடும்பத்தார் மற்றும் சக போட்டியாளர்களை வைத்து ஆஹா, ஓஹோ என்று பேச வைத்து மக்கள் மனதில் அவர்கள் பற்றி இருக்கும் கருத்தை மாற்ற முயற்சி செய்துள்ளனர் என்று விமர்சனம் எழுந்துள்ளது.

அடேங்கப்பா, கவின், லோஸ்லியா இவ்வளவு நல்லவர்களா, அப்போ ஏன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் அப்படி காட்டினார்கள் என்று பார்வையாளர்கள் கேட்கும் அளவுக்கு புகழ்ச்சி இருந்தது. பிக் பாஸ் 3 போன்றே பிக் பாஸ் கொண்டாட்டம் நிகழ்ச்சியும் படுபோர், இது தேவையில்லாத வேலை என்று பலரும் தெரிவித்துள்ளனர்.

பிக் பாஸ் வீட்டில் கெடுத்துக் கொண்ட பெயரை பிக் பாஸ் கொண்டாட்டம் மூலம் சரியாக்க முயற்சி நடந்துள்ளது. 100 நாள் கூத்தை பார்த்த மக்களின் மனதை சில மணிநேரம் நடந்த நிகழ்ச்சியால் மாற்றி விடலாம் என்று தப்புக் கணக்கு போட்டுவிட்டார்கள் என்று சமூக வலைதளங்களில் பேசிக் கொள்கிறார்கள்.

இதற்கிடையே முன்னாள் போட்டியாளர்களின் ஆதரவாளர்களுக்கு இடையே ட்விட்டரில் ஒரு பெரிய சண்டையே நடந்து கொண்டிருக்கிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்