ஆப்நகரம்

மக்கள் வேலைக்கு போவதா? அல்லது வங்கி வாசலில் வரிசையிலேயே நிற்பதா? : நடிகர் விஜய் சேதுபதி

மக்கள் வேலைக்கு போவதா? அல்லது வங்கி வாசலில் வரிசையிலேயே நிற்பதா? : நடிகர் விஜய் சேதுபதி

TOI Contributor 15 Nov 2016, 10:39 am
நடிகர் விஜய் சேதுபதி தமிழ்சினிமாவின் வளர்ந்து வரும் முக்கியமான நடிகர்களில் ஒருவர். சமூக அக்கறையுள்ள இவர், சமூகம் குறித்து பேச தவறியதே இல்லை. இவர் மத்திய அரசு சமீபத்தில் தடை செய்த 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் குறித்து கேள்வி எழுப்பியுள்ளார். கருப்புப்பணத்தை ஒழிக்கும் விதத்தில் மத்திய அரசு திடீரென 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் இனி செல்லாது என அறிவித்தது. அறிவிப்பை தொடர்ந்து சாமானியர்கள் வங்கி வாசலில் பல நாட்களாக காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
Samayam Tamil people go to work or wait in queues asks actor vijay sethupathi
மக்கள் வேலைக்கு போவதா? அல்லது வங்கி வாசலில் வரிசையிலேயே நிற்பதா? : நடிகர் விஜய் சேதுபதி


இது குறித்து கேள்வி எழுப்பிய விஜய் சேதுபதி, சென்னை போன்ற பெருநகரங்களிலேயே இவ்வளவு நீண்ட வரிசைகள் வங்களில் காணப்படும் போது, கிராமங்களின் நிலையை யோசித்து பாருங்கள். வங்களில் காத்திருப்பவர்களில் பெரும்பாலானவர்கள் தினமும் வேலை செய்து சாப்பிடுபவர்கள் தான். வேலைக்கு சென்றால் தான் உணவு என்ற நிலையில், பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்காக வங்கிகளில் காத்துக்கொண்டிருந்தால், அவர்கள் வேலைக்கு செல்வதா, வேண்டாமா என்று கேள்வி எழுப்பியுள்ளார். தன்னுடைய குழந்தைக்கு திடீரென் உடல் நலக்குறைவு ஏற்பட்ட போது ரூபாய் நோட்டுகள் செல்லாததால் தான் மிகவும் கஷ்டப்பட்டதாவும் விஜய் சேதுபதி கூறியுள்ளார். நல்ல நோக்கத்திற்காக எடுக்கப்பட்ட முடிவுதான் என்றாலும், மக்கள் பெரிதும் கஷ்டப்படுகின்றனர் என்று குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்