ஆப்நகரம்

'பேரன்பு' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ப்ரோமோ வீடியோ வெளியீடு!

'பேரன்பு' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ப்ரோமோ நேற்று வெளியாகி ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்றுள்ளது.

Samayam Tamil 9 Jul 2018, 2:51 pm
'பேரன்பு' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ப்ரோமோ நேற்று வெளியாகி ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்றுள்ளது.
Samayam Tamil pera
'பேரன்பு' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ப்ரோமோ வீடியோ வெளியீடு!


கற்றது தமிழ், தங்கமீன்கள், தரமணி படத்தை தொடர்ந்து, இயக்குநர் ராம் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் `பேரன்பு'. கேரளா சூப்பர் ஸ்டார் மம்முட்டி இந்த படத்தில் நாயகனாக நடிக்க அவருடன் சரத்குமார், அஞ்சலி, அஞ்சலி அமீர், சமுத்திரக்கனி, வடிவுக்கரசி, தங்கமீன்கள் சாதனா, லிவிங்ஸ்டன், சுராஜ், சித்திக், அருள்தாஸ் உள்பட பலரும் நடித்துள்ளனர். தமிழ், மலையாளம் என இரு மொழிகளில் உருவாகியுள்ள இந்த படம், பல நாடுகளில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு பயங்கர வரவேற்பை பெற்றது.


இந்த நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ப்ரோமோ வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த வீடியோவில் படத்தின் சில புகைப்படங்களுடன், ஷாங்காய் நகரில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவில் 'பேரன்பு' படம் திரையிடப்பட்டு, அந்நாட்டு மக்களின் கேள்விகளுக்கு இயக்குநர் ராம் பதிலளித்த காட்சிகள் இடம்பெற்றுள்ளன.


பி.எல். தேனப்பன் தயாரிப்பில் யுவன் ஷங்கர் ராஜா இசையில் உருவாகியிருக்கும் இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில், படத்தின் இசை மற்றும் டீஸர் ஜூலை 15-ம் தேதி சென்னை கலைவாணர் அரங்கத்தில் வெளியிட திட்டமிட்டிருக்கின்றனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்