ஆப்நகரம்

கமல்ஹாசனுடன் சண்டைக்கு வரும் பீட்டா..!

பீட்டா குறித்து நடிகர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள கருத்துக்கு பீட்டா அமைப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

TNN 25 Jan 2017, 5:14 pm
பீட்டா குறித்து நடிகர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள கருத்துக்கு பீட்டா அமைப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
Samayam Tamil peta india clarifies kamalhassans stand in jallikattu issue
கமல்ஹாசனுடன் சண்டைக்கு வரும் பீட்டா..!


தமிழகத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டங்களுக்கு தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வந்த நடிகர் கமல்ஹாசன்,தனது டிவிட்டர் பக்கத்தில் பீட்டா அமைப்பையும் கடுமையாக விமர்சித்தார்.குறிப்பாக “முதலில் டிரம்ப் அதிபராக உள்ள அமெரிக்காவுக்கே பீட்டா அமைப்பு மீண்டும் சென்று அங்கு விலங்குகளை துன்புறுத்தும் ரோடியோ விளையாட்டை தடை செய்யவும்.எங்களுடைய காளைகளை சமாளிக்க உங்களுக்கு தகுதியில்லை.”என தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

கமல்ஹாசனின் இந்த கருத்துக்கு பீட்டா இந்தியா அமைப்பின் தலைவரான பூர்வா ஜோஷிபுரா,அறிக்கை வாயிலாக பதிலளித்துள்ளார்.அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,”பீட்டா இந்தியா அமைப்பு,இந்தியாவில் உள்ள விலங்குகளை பாதுகாக்க செயல்பட்டு வருகிறது.இது ஒரு இந்திய அமைப்பு.இதுதவிர அமெரிக்காவில் இயங்கும் பீட்டா அமைப்பு கடந்த 1980-ஆம் ஆண்டு முதல் விலங்குகளுக்கு எதிரான நடவடிக்கைகளை எதிர்த்து வருகிறது.மேலும் அமெரிக்காவில் காளைச் சண்டை சட்ட விரோதமானது.

கமல் கூறியுள்ள ரோடியோ விளையாட்டும் அங்குள்ள பல மாகாணங்களில் சட்டவிரோதமாக அறிவிக்கப்பட்டுள்ளது.அமெரிக்கா மட்டுமல்லாமல் இங்கிலாந்து,நெதர்லாந்து போன்ற பல நாடுகளில் ரோடியோ விளையாட்டு தடை செய்யப்பட்டுள்ளது.மேலும் ஐரோப்பாவில் இயங்கி வரும் பீட்டா அமைப்பு,ஸ்பெயினின் பல்வேறு பகுதிகளில் காளைச் சண்டையை சட்டவிரோதமாக அறிவிக்கச் செய்துள்ளது.”என தெரிவிக்கப்பட்டுள்ளது.

PETA India clarifies Kamalhassan's stand in Jallikattu issue

அடுத்த செய்தி

டிரெண்டிங்