ஆப்நகரம்

அமெரிக்காவில் ‘பேட்ட’ வசூலித்த பல கோடி!

‘பேட்ட’ படம் அமெரிக்காவிலும் வெளியாகி அங்கு பல கோடி ரூபாய் வசூலித்துள்ளது.

Samayam Tamil 12 Jan 2019, 3:42 pm
அமெரிக்காவிலும் ரஜினிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அங்கு தமிழ் படம் பார்க்கும் அமெரிக்கர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கின்றது. இதற்கு முக்கிய காரணம் ரஜினி என்றால் மிகையல்ல. ஏனெனில் ரஜினி நடிப்பில் வெளியான ‘சிவாஜி’, ‘எந்திரன்’, ‘லிங்கா’, ‘காலா’, ‘கபாலி’, ‘2.03 என அனைத்து படங்களும் அங்கு வசூல் சாதனை செய்தது. அதனாலேயே தமிழ் படங்களுக்கு ஒரு பெரிய மார்க்கெட் வந்துள்ளது.
Samayam Tamil petta


இந்நிலையில் இரண்டு நாட்களுக்குமுன்பு வெளியான ‘பேட்ட’ படம் அமெரிக்காவில் 750கே டாலர் வசூல் செய்துள்ளதாம். அதாவது இந்திய மதிப்பில் படம் வெளிவந்த ஒரே நாளில் ப்ரீமியர் ஷோ சேர்த்து ரூ 5.28 கோடி வசூல் செய்துள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்