ஆப்நகரம்

Petta Movie: பேட்ட படத்தின் படப்பிடிப்பு முடிந்தது: ரஜினிகாந்த் அறிவிப்பு

‘பேட்ட’ படம் குறித்து ரஜினிகாந்த் தெரிவித்துள்ள முக்கிய தகவலை பார்க்கலாம்.

Samayam Tamil 19 Oct 2018, 7:22 pm
திட்டமிடப்பட்டதற்கு முன்னதாகவே ‘பேட்ட’ படத்தின் படப்பிடிப்பு பணிகள் வெற்றிகரமாக முடிவடைந்தது என நடிகர் ரஜினிகாந்த் ட்விட்டரில் அறிவித்துள்ளார்.
Samayam Tamil petta-movie-cover-pic
’பேட்ட’ படம் குறித்து ரஜினிகாந்த் முக்கிய பதிவு


கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் ரஜினிகாந்த் நடித்து வரும் படம் ‘பேட்ட’. தமிழ்நாடு, உத்தர பிரதேசம் உட்பட இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் இதற்கான படப்பிடிப்பு நடைபெற்று வந்தது.

நான்கு மாதங்களுக்கும் மேலாக நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள், 15 நாட்களுக்கு முன்னதாகவே முடிவு பெற்றுள்ளதாக நடிகர் ரஜினிகாந்த் தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார். அனைவருக்கும் விஜயதசமி வாழ்த்துக்களை தெரிவித்துள்ள ரஜினிகாந்த், ’பேட்ட’ படத்தில் பணியாற்றிய அனைத்து கலைஞர்களுக்கும் தனது நன்றிகளையும் தெரிவித்துக்கொண்டுள்ளார்.


இளம் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘பேட்ட’ படத்தில் ரஜினிகாந்த் கதாநாயகான நடிக்கும் நிலையில் விஜய் சேதுபதி, நவாஸுதின் சித்திகி, சிம்ரன், த்ரிஷா, பாபி சிம்ஹா, மாளவிகா மோகனன், குரு சோமசுந்தரம், மேகா ஆகாஷ், சசிகுமார் என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது.

’பேட்ட’ படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜூன் மாதம் தொடங்கப்பட்டு நடைபெற்று வந்த நிலையில், அது தற்போது முடிவுற்றுள்ளது. அதை தொடர்ந்து இந்த படம் 2019 ஆண்டு ஜனவரி 11ம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

’காலா’ படத்தை தொடர்ந்து ரஜினிகாந்த் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள ’2.0’ திரைப்படம் வரும் நவம்பர் 29ம் வெளிவருகிறது. அதை தொடர்ந்து ’பேட்ட’ படமும் விரைவில் வெளிவருவது அவரது ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை அளித்துள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்