ஆப்நகரம்

மீண்டும் விஷால் அதிரடி கைது? அதிர்ச்சியூட்டும் பரபரப்பு புகைப்படங்கள் வெளியானது!

சென்னை: விஷால் கைது செய்யப்பட்டதாக, இணையத்தில் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

Samayam Tamil 13 Jan 2019, 4:42 pm
தென்னிந்திய நடிகர் சங்கப் பொதுச் செயலாளராகவும், தயாரிப்பாளர் சங்கத் தலைவராகவும் நடிகர் விஷால் இருந்து வருகிறார். இதனால் எப்போதும் பிரச்சனைகளை தீர்க்கும் களத்தில் பரபரப்பாக இயங்கி கொண்டிருக்கிறார்.
Samayam Tamil Vishal arrest


இந்நிலையில் விஷால் குறித்து மற்றொரு பரபரப்பு இணையத்தில் பரவி வருகிறது. அதாவது நடிகர் விஷால் கைது செய்யப்பட்டுள்ளார். இதற்கு ஆதாரமாக சில புகைப்படங்கள் வெளியாகி, அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ஆனால் இது விஷால் நடிக்கும் ‘அயோக்யா’ படத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் என்று சினிமா விமர்சகர்களால் கூறப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு இறுதியில் தயாரிப்பாளர் சங்கத்திற்கு பூட்டு போட்ட விவகாரத்தில், அதை அதிரடியாக திறக்க முற்பட்ட போது போலீசாரால் விஷால் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில் 2019ஆம் ஆண்டின் தொடக்கமே விஷால் குறித்து பரபரப்பு தொற்றிக் கொண்டது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்