ஆப்நகரம்

பயந்துகிட்டே இருந்தா ஜெயிக்க முடியாது: பிக்ஸாரின் அனிமேஷம் படம்

ஒரு விஷயத்தைப் பற்றி தெரிந்து கொள்ள பயந்துகிட்டே இருந்தா அதைப் பற்றி தெரிந்து கொள்ள முடியாது.

TNN 7 Nov 2016, 11:41 am
ஒரு விஷயத்தைப் பற்றி தெரிந்து கொள்ள பயந்துகிட்டே இருந்தா அதைப் பற்றி தெரிந்து கொள்ள முடியாது. அனைவருக்கும் வாழ்க்கை பயணத்தில் ஒரு இலக்கு கண்டிப்பாக இருக்கும். அதை அடைய நினைப்பவர்களுக்கு பயம் தான் முதல் எதிரியாக இருக்கும். இதனை தனது ஷார்ட் பிலிம் மூலம் சொல்லியிருக்கிறது ஸ்டீவ் ஜாப்ஸ் உருவாக்கிய அனிமேஷன் நிறுவனமான பிக்ஸார்.
Samayam Tamil piper pixars new short film
பயந்துகிட்டே இருந்தா ஜெயிக்க முடியாது: பிக்ஸாரின் அனிமேஷம் படம்




கடல் ஓரத்தில் வாழ்கின்ற சாண்ட் ஃபைபெர் பறவைகள் கடல் அலைவரும் போது கரையை நோக்கி ஓடி வந்து விடும். அலை திரும்ப போனவுடன் அங்குள்ள கடல் உணவுகளை உண்ணும். புதிதாக பிறந்திருக்கும் குட்டி சாண்ட் பைபெருக்கு இறை தேட கடலுக்கு அழைத்துச் செல்கிறது தாய் சாண்ட் பைபெர். ஆனால், குட்டி சாண்ட் பைபெர் தண்ணீரில் நனைய மிரண்டுவிடுகிறது பேபி சாண்ட் பைபெர்.

ஒருநாள் இந்த குட்டி சாண்ட் பைபெர் பறவைகள் கடல் அலைகளை பார்த்துக்கொண்டு இருக்கும் போது நத்தை அலைகளில் இருந்து தங்களை எப்படி பாதுகாத்துக்கொள்கின்றன என்பதை வேடிக்கை பார்த்தன. அதன் பிறகு அதே வழியை பின்பற்றி பயத்தை போக்கி கடல் தண்ணீரில் குத்தாட்டம் போட ஆரம்பித்துவிட்டன இந்த சாண்ட் பைபெர் பறவைகள்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்