ஆப்நகரம்

திருட்டு வி.சி.டி. விவகாரம் :'ஜோக்கர்' படக்குழு புது முயற்சி

திருட்டு வி.சி.டி யில் ஜோக்கர் படத்தை பார்பவர்கள் அதற்கான பணத்தை வங்கி கணக்கில் செலுத்துமாறும் அந்த பணம் கழிவறை இல்லாத மக்களுக்கு கழிவறை கட்ட பயன்படுத்துவோம் என்று ஜோக்கர் படக்குழு வேண்டுகோள் விடுத்துள்ளது.

TOI Contributor 17 Aug 2016, 7:57 am
திருட்டு வி.சி.டி யில் ஜோக்கர் படத்தை பார்பவர்கள் அதற்கான பணத்தை வங்கி கணக்கில் செலுத்துமாறும் அந்த பணம் கழிவறை இல்லாத மக்களுக்கு கழிவறை கட்ட பயன்படுத்துவோம் என்று ஜோக்கர் படக்குழு வேண்டுகோள் விடுத்துள்ளது.
Samayam Tamil piracy vcds issue joker movie team new view to handle
திருட்டு வி.சி.டி. விவகாரம் :'ஜோக்கர்' படக்குழு புது முயற்சி



‘ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்’ நிறுவனம் தயாரித்து, ராஜுமுருகன் இயக்கத்தில் சென்ற வெள்ளிக்கிழமை அன்று வெளியான படம் ‘ஜோக்கர்’. ரசிகர்களிடையே பெரும் பாராட்டுக்களை பெற்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் இப்படம் , திருட்டு வி.சி.டி. விவகாரம் தொடர்பாக ஒரு வித்தியாசமான புதிய முயற்சி ஒன்றை கையாண்டுள்ளது.


இது குறித்து 'ஜோக்கர்' படக்குழு வெளியிட்ட போஸ்டரில் கூறியிடுப்பதாவது: '' திருட்டு வி.சி.டி.யில், இணைய தரவிறக்கத்தில் படம் பார்ப்பதும் ஊழலின் - சுரண்டலின் இன்னொரு அங்கம்தான். ஒரு சினிமா பல நூறு தொழிலாளர்களின் வியர்வை, சில ஆண்டு உழைப்பு. இதையும் தாண்டி திருட்டு வி.சி.டி.யில் படம் பார்ப்பவர்கள் அதற்கான நியாயமான தொகையை வங்கிக்கணக்கில் செலுத்திடுவிடுங்கள்.

நீங்கள் அனுப்புகிற பணம் இந்த தேசத்தில் கழிவறை இல்லாத குடிமக்களுக்கு கழிவறை கட்டித்தர பயன்படுத்தப்படும்''என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

#Joker #SayNoToPiracy@prabhu_sr #Rajumurugan @RSeanRoldan @Rchezhi #GuruSomasundaram @ramyapandian1 pic.twitter.com/0lrj5SjEQR— DreamWarriorPictures (@DreamWarriorpic) August 16, 2016


"ஜோக்கர்" படக்குழுவி இந்த வித்தியாச முயற்சியைக் குறித்த போஸ்டர் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்