ஆப்நகரம்

தெலுங்கு ‘ஓம் நமோ வெங்கடேசாய தமிழில் ‘பிரமாண்ட நாயகன்’ என்ற பெயரில் வெளியாகிறது!

தெலுங்கில் நாகார்ஜுனா, அனுஷ்கா நடிப்பில் உருவான ‘ஓம் நமோ வெங்கடேசயா’ படம் தமிழில் ‘பிரமாண்ட நாயகன்’ என்ற பெயரில் டப் செய்யப்ப்டடு வெளியாகவுள்ளது.

TNN 14 Aug 2017, 7:25 pm
தெலுங்கில் நாகார்ஜுனா, அனுஷ்கா நடிப்பில் உருவான ‘ஓம் நமோ வெங்கடேசயா’ படம் தமிழில் ‘பிரமாண்ட நாயகன்’ என்ற பெயரில் டப் செய்யப்ப்டடு வெளியாகவுள்ளது.
Samayam Tamil pirammanda nayagan will release in tamil soon
தெலுங்கு ‘ஓம் நமோ வெங்கடேசாய தமிழில் ‘பிரமாண்ட நாயகன்’ என்ற பெயரில் வெளியாகிறது!


கடந்த பிப்ரவரி மாதம் தெலுங்கில் வெளிவந்த படம் ‘ஓம் நமோ வெங்கடேசாய’. இதில் நாகார்ஜுனா, அனுஷ்கா, பிரயக்யா, ஜெகபதி பாபு உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். படத்தை கே.ராகவேந்திரராவ் இயக்கி இருந்தார். படத்திற்க மரகதமணி இசையமைத்திருந்தார் இந்தப்படம் திருப்பதி பெருமாளின் மகிமையை கூறும் சமூக மற்றும் பேண்டசி படம். ஹாத்திராம் பாபாவின் கதையை மையமாக வைத்து இப்படம் உருவாகி உள்ளது.

இந்தப் படம் ‘பிரமாண்ட நாயகன்’ என்ற பெயரில் தமிழில் டப் ஆகிறது. இதன் தமிழ் வசனம் மற்றும் பாடல்களை டி.எஸ்.பாலன் எழுதியுள்ளார். பெருமாளுக்கு உகந்த புரட்டாசி மாதத்தில் ஜோஷிகா பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர்கள் துரைமுருகனும், நாகராஜனும் வெளியிடுகிறார்கள்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்