ஆப்நகரம்

எனக்கு ஒரு பாய்ஃப்ரண்ட் அனுப்பி வைங்க: பிக்பாஸிடம் கெஞ்சிய ரைசா

எனக்கு ஒரு பையனை அனுப்பி வைங்க என்று மாடலிங் ரைசா பிஸ்பாஸிடம் கேட்டுள்ளார்.

TNN 8 Jul 2017, 5:37 pm
எனக்கு ஒரு பையனை அனுப்பி வைங்க என்று மாடலிங் ரைசா பிஸ்பாஸிடம் கேட்டுள்ளார்.
Samayam Tamil please give me a boy friend raiza asked bigggboss
எனக்கு ஒரு பாய்ஃப்ரண்ட் அனுப்பி வைங்க: பிக்பாஸிடம் கெஞ்சிய ரைசா


12வது எபிசோடான நேற்று தான் எந்த பிரச்சனையும் இல்லாமல் பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சி நடந்துள்ளது. இதில், காயத்ரி ரகுராம், ஆர்த்தி ஆகியோரிடம் ஜூலி நடந்த பிரச்சனைக்கு மன்னிப்பு கேட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து பிக்பாஸ் தமிழ் பள்ளியின் ஆண்டு விழா நடந்தது. அதில், அனைவரும் குழுவாக பிரிந்து பாட்டு, டான்ஸ், நாடகம் என்று தங்கள் திறமைகளை மேடையில் அரங்கேற்றினர். ஓவியா, இன்று எனக்கு முக்கியமான நாள். இதற்காக என்ன ஆடை அணியலாம் என்று மற்ற பெண் போட்டியாளர்களிடம் கேட்டு கொண்டிருந்தார். அதற்கு ஆர்த்தி, காயத்ரி, நமீதா ஆகியோர் சேலை, சுடிதார் போன்ற பாரம்பரிய உடை தான் நன்றாக இருக்கும் என்று கூறினார்.



இந்நிலையில் புதிய ஆடை அணிந்து வந்த ஓவியாவை மற்றவர்கள் ஆடை அழகாக உள்ளதாக பாராட்டுகின்றனர். அதோடு, அவரது காதலனாக கருதப்படும் ஆரவ்வும் அழகாக இருப்பதாக கூறினர். இதனைத் தொடர்ந்து ரைசா கூறுகையில், உன்னுடைய உடை, இயர் ரிங் அழகாக உள்ளது என்கிறார். உடனே ஓவியா நான் போய் என்னுடைய ஆள் ஆரவ்வுடன் பேசிட்டு வருகிறேன் என்று சொல்லிவிட்டு சென்றுவிட்டார். அப்போது எனக்கும் இந்த மாதிரி கம்பெனிக்கு ஒரு ஆள் இருந்தா நன்றாக இருக்கும் என்று கூறினார். இது குறித்து பிக்பாஸிடம் எனக்கும் ஒரு பையனை அனுப்பி வைங்க என்று விளையாட்டாக கூறியது மற்றவர்களுக்கு சிரிப்பை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்