ஆப்நகரம்

பொளக்கட்டும் பற பற.. மாஸ்டர் பட பாடல் ரிலீஸ் ஆனது

மாஸ்டர் படத்தின் புதிய பாடல் பொளக்கட்டும் பற பற தற்போது ரிலீஸ் ஆகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

Samayam Tamil 1 Apr 2020, 1:59 pm
மாஸ்டர் படத்தின் பாடல்கள் ஒவ்வொன்றாக ரிலீஸ் ஆகி விஜய் ரசிகர்களிடம் வெறித்தனமான ரெஸ்பான்ஸ் கிடைத்து வருகிறது.
Samayam Tamil Vijay in Master


தற்போது விஜய் சேதுபதிக்காக மாஸ்டர் படத்தில் உள்ள "பொளக்கட்டும் பற பற" பாடல் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. அனிருத் இசையமைத்துள்ள இந்த பாடலை சந்தோஷ் நாராயணன் பாடியுள்ளார்.

"உங்களுக்கு ரெண்டு நிமிஷம் டைம் தரேன். முடிஞ்சா என்ன கொன்னுட்டு உங்கள காப்பதிக்கோங்க" என விஜய் சேதுபதி பேசும் வசனத்துடன் துவங்குகிறது இந்த பாடல். அதனால் படத்தில் விஜய் சேதுபதியின் சண்டை காட்சிக்கு பிறகு இந்த பாடல் வரலாம் என தெரிகிறது.

தற்போது இணையத்தில் ட்ரெண்டாகிவரும் அந்த பாடல் இதோ..


லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் மாஸ்டர் படத்தில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், அர்ஜுன் தாஸ், ஆண்ட்ரியா, சாந்தனு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

ஷூட்டிங் முடிந்து இறுதிக்கட்ட பணிகள் நடந்துவந்த நிலையில் கொரோனா காரணமாக தற்போது அனைத்து பணிகளும் நிறுத்தப்பட்டுள்ளது. ஏப்ரல் 9ம் தேதி ரிலீஸ் என எதிர்பார்க்கப்பட்ட மாஸ்டர் வேறு தேதிக்கு தள்ளிப்போகிறது. கொரோனா லாக்டவுன் முடிந்தபிறகு தான் புதிய ரிலீஸ் தேதி பற்றிய அறிவிப்பு வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் சென்ற வாரமே ரிலீஸ் ஆகியிருக்க வேண்டிய ட்ரைலரும் இன்னும் வெளியிடப்படவில்லை. அது எப்போது வரும் என்று தான் ரசிகர்கள் அனைவரும் காத்திருக்கின்றனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்