ஆப்நகரம்

நள்ளிரவில் என் வீட்டு கதவை தட்டிய போலீசார்; ஏ.ஆர்.முருகதாஸ் பகீர்!

சென்னை: போலீசார் தன் வீட்டிற்கு நள்ளிரவில் வந்ததாக இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் விளக்கம் அளித்துள்ளார்.

Samayam Tamil 9 Nov 2018, 10:09 am
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தீபாவளியை ஒட்டி வெளிவந்த திரைப்படம் ‘சர்கார்’. இதில் விஜய், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி, சரத்குமார் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.
Samayam Tamil ARMurugadoss


கள்ள ஓட்டு விவகாரத்தை கருவாகக் கொண்டு, தற்கால அரசியல் சூழலை கடுமையாக விமர்சித்து கதை உருவாக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தைப் பார்த்த ஆளுங்கட்சியினர் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை அவமானப்படுத்தியும், தமிழக அரசின் திட்டங்களை இழிவுபடுத்தியும் காட்சிகள் இருப்பதாக குற்றம்சாட்டியுள்ளனர். இந்தக் காட்சிகள் நீக்கும் வரை படத்தை திரையிட விடமாட்டோம் என்று அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க தமிழக அமைச்சர்கள் சிவி சண்முகம், கடம்பூர் ராஜூ, ஜெயக்குமார், கேபி அன்பழகன் உள்ளிட்டோர் ஈடுபட்டுள்ளனர்.

இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் கைது?- வீட்டின் முன் குவிந்த போலீஸ்!!

இந்நிலையில் சமூக நலனை சீர்குலைக்கும் வகையிலும், மாநில அரசுக்கு எதிராக பொதுமக்களை வன்முறைக்கு தூண்டும் வகையிலும் சர்கார் படம் இருப்பதாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் தேவராஜன் என்பவர் புகார் அளித்துள்ளார்.

அதில் சர்கார் பட இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் மீது தேச துரோக சட்டப்பிரிவில் நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளார். இந்நிலையில் நேற்று இரவு ஏ.ஆர்.முருகதாஸ் வீட்டிற்கு போலீசார் சென்றுள்ளனர். அவரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால் வழக்கமான ரோந்து பணியே என்று போலீசார் விளக்கம் அளித்துள்ளனர்.

இதுதொடர்பாக டுவிட்டரில் பதிவிட்டுள்ள இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ், நள்ளிரவில் எனது வீட்டிற்கு போலீசார் வந்துள்ளனர். பலமுறை கதவை தட்டியுள்ளனர். நான் அப்போது வீட்டில் இல்லை. ஆதலால் போலீசார் அங்கிருந்து திரும்பிச் சென்றனர். தற்போது என் வீட்டில் முன்பு எந்தவொரு போலீசாரும் என்று தெரியவந்துள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்