ஆப்நகரம்

Varisu Audio Launch: விஜய் ரசிகர்களால் காயமடைந்த போலீஸ்: உச்சக்கட்ட பரபரப்பு.!

'வாரிசு' ஆடியோ லான்ச் விழாவில் ஏற்பட்ட தள்ளுமுள்ளு காரணமாக போலீசார் சிலர் காயமடைந்துள்ள சம்பவம் பரபரப்பை கிளப்பியுள்ளது.

Authored byஆஷிக் முகமது | Samayam Tamil 24 Dec 2022, 7:41 pm
தமிழ் சினிமாவில் உச்சநட்சத்திரமாக திகழ்பவர் நடிகர். இவருக்கென தனியொரு ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இவரது படங்கள் வெளியாகும் சமயத்திலே எல்லாம் திருவிழா போல் கொண்டாடுவார்கள் ரசிகர்கள். இந்நிலையில் பொங்கலுக்கு வெளியாகவுள்ள விஜய்யின் 'வாரிசு' படத்திற்கான இசை வெளியீட்டு விழா தற்போது சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரம்மாண்டமாக நடந்து வருகிறது.
Samayam Tamil வாரிசு
வாரிசு


விஜய்யின் 'வாரிசு' பட ரிலீசுக்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. விஜய் நடிப்பில் கடைசியாக வெளியான 'பீஸ்ட்' படம் நெகட்டிவ் விமர்சனங்களை குவித்ததால், அவர் தற்போது நடித்து முடித்துள்ள 'வாரிசு' படத்தை அதிகம் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் ரசிகர்கள்.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

‘வாரிசு’ படத்தினை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிப்பில் தில் ராஜு தயாரித்துள்ளார் . இதன் படப்பிடிப்பு சென்னை, ஐதராபாத் உள்ளிட்ட இடங்களில் நடந்து முடிந்த நிலையில் தற்போது இறுதிக்கட்ட பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. விஜய்யின் ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ள இந்தப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார்.

VJ Archana: ஊர் வாயை அடைக்க முடியாது: வைரமுத்து பற்றிய சர்ச்சைகளுக்கு அர்ச்சனாவின் பதிலடி.!

'வாரிசு’ படத்தின் இசை வெளியீட்டு விழாவை பிரம்மாண்டமாக ஏற்பாடு செய்து அதில் கலந்து கொள்ள விஜய் மக்கள் மன்றத்திலிருந்து பாஸ் வழங்கப்பட்டது. இதற்காக 4000 முதல் 7000 ரூபாய் வரை டிக்கெட் விற்பனை செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் இன்று இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள ரசிகர்கள் ஆரவாரத்துடன் நேரு உள்விளையாட்டு அரங்கில் குவிந்தனர்.

Vijay vs Ajith: அஜித் பற்றி தரக்குறைவான போஸ்டர்: விஜய் ரசிகர்கள் செயலால் வெடித்த சர்ச்சை.!

இந்நிலையில் 'வாரிசு’ இசை வெளியீட்டு விழாவில் ரசிகர்களை தடுத்து நிறுத்திய போலீசார் பலத்த காயம் அடைந்துள்ளதாகவும், அதுக்குறித்த வீடியோ ஒன்றும் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. மேலும் ரசிகர்கள் ஆர்வம் மிகுதியால் போலீசாரை தள்ளிவிட்டு உள்ளே சென்றதால் ஒருசில போலீசாருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதுக்குறித்து ப்ளு சட்டை மாறன் தனது ட்விட்டர் பக்கத்தில், என் பேனரை கிழியுங்கள். ஆனால் ரசிகர்கள் மீது கைவைக்க வேண்டாம்' என பிகில் இசை வெளியீட்டில் எச்சரித்து இருந்தார். 'இப்போது போலீஸை கீழே போட்டு தள்ளிவிட்டு ஓடிய சம்பவத்திற்கு மன்னிப்பு கேட்பாரா?' என பொதுமக்கள் கேள்வி என்று பதிவிட்டுள்ளார். அவரின் பதிவு இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் இந்த சம்பவம் தற்போது பரபரப்பை கிளப்பியுள்ளது.

எழுத்தாளர் பற்றி
ஆஷிக் முகமது
நான் ஆசிக் முகமது. ஊடகத்துறையில் கடந்த நான்கு வருடமாக பணியாற்றி வருகிறேன். எழுத்தின் மீதிருந்த ஆர்வத்தால் இந்த துறையை தேர்ந்தெடுத்தேன். அரசியல், கவிதை, சினிமாவில் ஆர்வம் கொண்ட நான், தற்போது டைம்ஸ் ஆப் இந்தியாவின் சமயம் தமிழ் இணைய ஊடகத்தில் சினிமா சம்பந்தமான கட்டுரைகள் எழுதி வருகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்