ஆப்நகரம்

ஐசரி கணேஷ் கைது? நடிகர் சங்க தேர்தல் நாளில் இப்படியொரு அதிர்ச்சி செய்தி!

நடிகர் சங்க தேர்தல் விவகாரத்தில் முறைகேடாக நடைபெற முயன்றதாக எழுந்த புகாரில், ஐசரி கணேஷ் கைது செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Samayam Tamil 23 Jun 2019, 11:01 am
தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் இன்று(ஜூன் 23, 2019) அன்று, சென்னை மயிலாப்பூரில் உள்ள புனித எப்பாஸ் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறுகிறது. இதில் நாசர் தலைமையில் விஷால் முன்னிலையில் பாண்டவர் அணியும், பாக்கியராஜ் தலைமையில், ஐசரி கணேஷ் முன்னிலையில் சுவாமி சங்கரதாஸ் அணியும் போட்டியிடுகின்றனர்.
Samayam Tamil Isari Ganesh


பதிவாளர் சங்கம் தேர்தலுக்கு எதிராக விதித்த தடையை எதிர்த்து, நீதிமன்றத்தை விஷால் குழு அணுகியது. தேர்தலை நடத்த இருந்த தடையை நீக்கி நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பில் தான் ஐசரி கணேஷ் கைதாகக்கூடிய விஷயம் அடங்கியுள்ளது.

நடிகர் சங்க தேர்தலுக்கு பாதுகாப்பு கேட்டு, நீதிமன்றத்தில் நடிகர் சங்கத்தின் பொது செயலாளர் விஷால் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த வழக்கின் விசாரணை நடைபெற்றது. விசாரணைக்கு பிறகு, வழக்கின் உத்தரவு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் இல்லத்தில் வழங்கப்பட்டது. உத்தரவில் நடிகர் சங்க தேர்தலுக்கு காவல்துறை தகுந்த பாதுகாப்பு அளிக்கவேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

அவ்வளவு தான் இருந்ததா இந்த உத்தரவில் என்றால், அதுதான் இல்லை! அந்த உத்தரவில் பகிர் என்று ஒரு விஷயமும் இருந்தது. அதாவது இந்த வழக்கை விசாரிக்கும் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், சுவாமி சங்கரதாஸ் அணிக்கு சாதகமாக தீர்ப்பை வழங்க கோரி ஐசரி கணேஷ் மற்றும் அனந்த நாராயணன் ஆகிய இருவரும் அவரை அணுகினார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

அதுமட்டுமின்றி, நீதியையும், நீதிமன்றத்தையும் அவமதிக்கும் விதமாக இத்தகைய செயலில் ஈடுபட்ட ஐசரி கணேஷ் மற்றும் அனந்த நாராயணன் ஆகிய இருவர் மீதும் நீதிமன்றமே முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கை பதிவு செய்கிறது என்றும் அந்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளார் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்.

நீதிபதி கண்டிக்கும் விதமாக இப்படி ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளதால், ஐசரி கணேஷ் மற்றும் அனந்த நாராயணன் நீதிபதியை ஏதாவது மிக தவறான வகையில் அணுகி அவர்களுக்கு சாதகமாக வழக்கின் உத்தரவை பிறப்பிக்க சொன்னார்களா? என சந்தேகம் வலுவாக எழுகிறது.

நீதிபதியை மிக தவறான வகையில் ஐசரி கணேஷும், அனந்த நாராயணனும் அணுகியிருந்தால், அவர்கள் கைதாவது உறுதி என சட்ட வல்லுநர்கள் சொல்கின்றனர். ஐசரி கணேஷ் சுமார் 26 கல்வி நிறுவனங்களை நடத்தி வருகிறார். இவர் மீது பல வழக்குகள் உள்ளன.

அதில் ஒன்று பச்சையப்பன் கல்லூரி ட்ரஸ்டில் இவர் உறுப்பினராக இருந்த போது, அதே ட்ரஸ்டில் இருந்த ஒருவரை கொடூரமாக தாக்கியுள்ளார். இதன் காரணமாக இவர் சுமார் 10 நாட்களுக்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்த வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஐசரி கணேஷ் கைதாவரா என்பது சில நாட்களில் தெரியும்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்