ஆப்நகரம்

எல்லாமே ஒரிஜினல் தங்க நகையா.?: பிரம்மிக்க வைக்கும் ‘பொன்னியின் செல்வன்’ படக்குழு.!

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பொன்னியின் செல்வன்’ படம் வரும் 30ஆம் தேதி பிரமாண்டமாக உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது.

Samayam Tamil 9 Aug 2022, 5:49 pm
மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் 'பொன்னியின் செல்வன்' படத்தை இந்திய சினிமாவே எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கிறது. எழுத்தாளர் கல்கி கிருஷ்ணமூர்த்தி எழுதிய புகழ்பெற்ற நாவலான 'பொன்னியின் செல்வன்' கதை அதே பெயரில் படமாக உருவாகி வெளியீட்டிற்கு தயாராக உள்ளது.
Samayam Tamil பொன்னியின் செல்வன்
பொன்னியின் செல்வன்


விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்ய லட்சுமி, த்ரிஷா, பிரபு, சரத்குமார், விக்ரம் பிரபு, கிஷோர், ஜெயராம், லால், ரகுமான் உள்ளிட்ட பல மொழிகளை சேர்ந்த பிரபல நட்சத்திரங்கள் நடிக்கும் 'பொன்னியன் செல்வன்' படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தப்படத்தை பிரம்மாண்டமாக இரண்டு பாகங்களாக உருவாக்குகிறார் இயக்குனர் மணிரத்னம்.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

மெட்ராஸ் டாக்கிஸ் நிறுவனமும், லைக்கா நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் இந்த படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இந்தப்படத்தின் புரோமோஷன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் அரசர், அரசிகள் அனைவரும் உண்மையான தங்க நகைகள் பயன்படுத்தியுள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. பிரபல ஜூவல்லரி நிறுவனம் ஒன்று இந்த படத்திற்கு தேவையான அனைத்து நகைகளையும் கொடுத்து உதவியதாகவும் இதனை அடுத்து இந்த நிறுவனம் ’பொன்னியின் செல்வன்’ படத்தின் ஜூவல்லரி பார்ட்னர் என லைகா நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

Viruman: அதிதி ஷங்கர் இப்படி பண்ணலாமா..?: அதிர்ச்சியில் ரசிகர்கள்.!

இதனை அடுத்து இந்த படத்தில் நடித்துள்ள ஐஸ்வர்யாராய், த்ரிஷா உள்பட அனைவருமே அணிந்திருந்த நகைகள் உண்மையான தங்க நகைகள் என்பது தெரிய வந்துள்ளது. இந்த தகவல் தற்போது ரசிகர்களுக்கு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ‘பொன்னியின் செல்வன்’ படம் வரும் 30ஆம் தேதி பிரமாண்டமாக உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்