ஆப்நகரம்

Ponniyin Selvan 2: 'பொன்னியின் செல்வன் 2' இவ்வளவு சீக்கிரம் ரிலீஸ் ஆகுதா.?: அதிரடி அறிவிப்பு.!

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள 'பொன்னியின் செல்வன்' படத்தின் இரண்டாம் பாகம் ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Authored byஆஷிக் முகமது | Samayam Tamil 28 Dec 2022, 6:08 pm
கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவல் அதே பெயரில் மணிரத்னம் இயக்கத்தில் படமாகி கடந்த செப்டம்பர் மாதம் வெளியானது. ரசிகர்களின் மிக நீண்ட எதிர்பார்ப்பிற்கு மத்தியில் வெளியான இந்தப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்று பாக்ஸ் ஆபிசில் வசூல் சாதனை படைத்தது. இந்நிலையில் தற்போது 'பொன்னியின் செல்வன்' படத்தின் இரண்டாம் பாகத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது.
Samayam Tamil Ponniyin Selvan
Ponniyin Selvan


மணிரத்னம் இயக்கத்தில் வெளியான 'பொன்னியின் செல்வன்' படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. கடந்த செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய 5 மொழிகளில் பிரம்மாண்டமாக ரிலீசான‘பொன்னியின் செல்வன்’ படம் பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய வசூல் சாதனை படைத்தது.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்ய லட்சுமி, த்ரிஷா, பிரபு, சரத்குமார், விக்ரம் பிரபு, கிஷோர், ஜெயராம், லால், ரகுமான் உள்ளிட்ட பல மொழிகளை சேர்ந்த பிரபல நட்சத்திரங்கள் நடிப்பில் வெளியானது 'பொன்னியன் செல்வன்' படம். மெட்ராஸ் டாக்கிஸ் நிறுவனமும், லைகா நிறுவனமும் இணைந்து தயாரித்த இந்த படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்தார்.

உலகம் முழுவதும் 'பொன்னியின் செல்வன்' படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய ஓபனிங் கிடைத்தது. இந்தப்படம் வசூலிலும் மிகப்பெரிய சாதனை படைத்தது. திரையுலகினர் பலரின் பாராட்டு மழையிலும் இந்தப்படம் நனைந்தது. இந்திய அளவில் இந்தப் படம் ரூபாய் 500 கோடிக்கும் அதிகமாக வசூலித்து கோலிவுட்டையே பிரம்மிப்பில் ஆழ்த்தியது.

Rashmika Mandanna: பைக்கில் பாலோ பண்ணிய இளைஞர்கள்: நேஷனல் கிரஸ் செய்த காரியம்.!

முதல் பாகத்தின் படப்பிடிப்பின் போதே இரண்டாம் பாகத்திற்கான ஷுட்டிங்கும் நடந்தது. மேலும் 'பொன்னியின் செல்வன்' படத்தின் இரண்டாம் பாகத்தை அடுத்தாண்டு சம்மருக்கு வெளியிடவும் படக்குழுவினர் திட்டமிட்டதாக கூறப்பட்டது. இந்நிலையில் 'பொன்னியின் செல்வன்' இரண்டாம் பாகத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

Siddharth: இந்தியில் பேசி என் பெற்றோர்களை துன்புறுத்தினார்கள்: சித்தார்த் பரபரப்பு குற்றச்சாட்டு.!

அதன்படி இப்படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் 28 ஆம் தேதி சம்மர் ரிலீசாக வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இதனை தங்களது சமூக வலைத்தளத்தில் புதிய வீடியோ ஒன்றை பகிர்ந்து அறிவித்துள்ளது படக்குழு, 'பொன்னியின் செல்வன்' காட்சிகள் இடம்பெற்றுள்ள இந்த வீடியோ தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

எழுத்தாளர் பற்றி
ஆஷிக் முகமது
நான் ஆசிக் முகமது. ஊடகத்துறையில் கடந்த நான்கு வருடமாக பணியாற்றி வருகிறேன். எழுத்தின் மீதிருந்த ஆர்வத்தால் இந்த துறையை தேர்ந்தெடுத்தேன். அரசியல், கவிதை, சினிமாவில் ஆர்வம் கொண்ட நான், தற்போது டைம்ஸ் ஆப் இந்தியாவின் சமயம் தமிழ் இணைய ஊடகத்தில் சினிமா சம்பந்தமான கட்டுரைகள் எழுதி வருகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்