ஆப்நகரம்

மீண்டும் இணையும் 'ரஜினிமுருகன்' கூட்டணி

இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன், சூரி கூட்டணியில் உருவான 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்', 'ரஜினிமுருகன்' வெற்றியைத் தொடர்ந்து மூன்றவது முறையாக மீண்டும் இணைந்துள்ளனர்.

TNN 16 Aug 2016, 3:31 pm
சென்னை: இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன், சூரி கூட்டணியில் உருவான 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்', 'ரஜினிமுருகன்' வெற்றியைத் தொடர்ந்து மூன்றவது முறையாக மீண்டும் இணைந்துள்ளனர்.
Samayam Tamil ponram starts his third project with sivakarthikeyan and soori
மீண்டும் இணையும் 'ரஜினிமுருகன்' கூட்டணி


ஆர்டி.ராஜாவின் 24 ஏஎம் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் உருவாகவிருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு துவங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் காமெடி நடிகராக சூரி நடிக்கிறார். படத்தின் கதாநாயகி குறித்து இதுவரை முடிவெடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

இதே தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து நடிகர் சிவகார்த்திகேயன் இயக்குனர் மோகன் ராஜா படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
with all ur blessings,after the successful journey of VVS&Rajinimurugan i start my third project with @Siva_kartikeyan for @24AMSTUDIOS.— ponram (@ponramVVS) August 16, 2016
'தனிஒருவன்' இயக்குனரின் படத்தின் பணிகள் வருகிற செப்டம்பர் மாதம் முதல் துவங்கவுள்ளது. இப்படத்தில் முதன் முறையாக 'லேடி சூப்பர்ஸ்டார்' நயன்தாராவுடன் சிவகார்த்திகேயன் ஜோடி சேர்ந்து நடிக்கவுள்ளார். இப்படத்தின் வில்லனாக மலையாள நடிகர் ஃபகத் ஃபாசில் நடிக்கவுள்ளார்.

இதனிடையே, சிவகார்த்திகேயன் - கீர்த்தி சுரேஷ் ஜோடி சேர்ந்து நடித்துள்ள 'ரெமோ' படத்தின் புரோமோஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

அடுத்த செய்தி

டிரெண்டிங்