ஆப்நகரம்

ஹீரோயின் வாய்ப்பு கிடைக்காததால் குத்துப் பாடலுக்கு நடனமாடும் பூஜா ஹெக்டே!

ஹீரோயினியாக வலம் வந்த நடிகை பூஜா ஹெக்டேவுக்கு சான்ஸ் கிடைக்காததால் குத்து பாடலுக்கு டான்ஸ் ஆடவுள்ளார்.

Samayam Tamil 5 Oct 2017, 4:44 pm
ஹீரோயினியாக வலம் வந்த நடிகை பூஜா ஹெக்டேவுக்கு சான்ஸ் கிடைக்காததால் குத்து பாடலுக்கு டான்ஸ் ஆடவுள்ளார்.
Samayam Tamil pooja hegde lands a special song in rangasthalam
ஹீரோயின் வாய்ப்பு கிடைக்காததால் குத்துப் பாடலுக்கு நடனமாடும் பூஜா ஹெக்டே!


நடிகர் ஜீவாவை கதாநாயகனாக வைத்து மிஷ்கின் இயக்கிய படம் ‘முகமூடி’. இந்தப் படத்தில் நாயகியாக அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. அதன்பிறகு தமிழில் வாய்ப்புகள் அமையாததால் பாலிவுட்டுக்கு சென்றார்.

பாலிவுட்டில் ஹிருத்திக் ரோஷனுடன் நடித்த முதல் படம் ‘மொகஞ்சதரோ’. இந்த படம் தோல்வி அடைந்தது. தற்போது டோலிவுட்டில் முகாமிட்டுள்ளார். சமீபத்தில் வெளியான அல்லு அர்ஜூனின் ‘டிஜே’ படத்தில் நடித்தவர், அடுத்து வேறு படங்கள் எதுவும் இல்லாததால் தற்போது ராம்சரண் நடித்து வரும் ‘ரங்கஸ்தலம்’ என்ற படத்தில் ஒரு அயிட்டம் பாடலுக்கு குத்தாட்டம் போடவுள்ளார்.

இந்த படத்தில் சமந்தா நாயகியாக நடிக்கிறார். ஆனால், நடிகை சமந்தா திருமணமாகி குடும்ப வாழ்க்கையில் ஈடுபடப்போவதால் கவர்ச்சியாக நடிப்பதை தவிர்த்து வருகிறார். அதனால் தெலுங்கு ரசிகர்களின் ஆசையை பூர்த்தி செய்ய நடிகை பூஜா ஹெக்டேவை ராம்சரணுடன் ஒரு பாடலில் குத்தாட்டம் போட வைக்கவுள்ளார் இயக்குனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்