ஆப்நகரம்

ராஜசேகருக்கு ஜோடியாக நடிக்கிறார் பூஜா குமார்!

‘குண்டூர் டாக்கீஸ்’ படத்தில் ராஜசேகருக்கு ஜோடியாக பூஜா குமார் நடிக்கிறார்.

TOI Contributor 25 Nov 2016, 5:16 pm
‘குண்டூர் டாக்கீஸ்’ படத்தில் ராஜசேகருக்கு ஜோடியாக பூஜா குமார் நடிக்கிறார்.
Samayam Tamil pooja kumar acts with raja sekar
ராஜசேகருக்கு ஜோடியாக நடிக்கிறார் பூஜா குமார்!


தமிழில் ‘இதுதாண்டா போலீஸ்’ படம் பிரபலமானவர் டாக்டர் ராஜசேகர். இவர் தமிழை விட அதிகமாக தெலுங்கு படங்களில்தான் நடித்தார்.

டாகடர் ராஜசேகர் நீண்ட இடைவெளிக்கு பிறகு ‘குண்டூர் டாக்கிஸ்’ என்ற தெலுங்கு படத்தில் போலீஸ் வேடத்தில் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக நடிக்க இளம் ஹீரோயின்கள் யாரும் தயாராக இல்லை. இவருக்கு ஜோடியாக நடிக்க இளம் நடிகைகளிடம் கால்ஷீட் கேட்டால் யாரும் கண்டு கொள்வதில்லையாம். மற்ற ஹீரோயின்கள் கைவிட்டாலும் ராஜசேகருக்கு கால்ஷீட் கொடுத்து கைகொடுத்திருக்கிறார் பூஜாகுமார். இவர்கள் இருவரும் இணைந்து நடித்த காட்சிகள் ஏற்கனவே ஐதராபாத்தில் படமாக்கப்பட்டது. அடுத்து ஜியார்ஜியா நாட்டில் நடக்கவுள்ள படப்பிடிப்பில் பங்கேற்கின்றனர்.

சமீபத்தில், வெளியான ‘மீன் குழம்பும் மண் பானையும்’ படத்தில் மலேசியா டானாக நடித்துள்ளார் பூஜாகுமார். தற்போது இவர் ‘சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்’ படத்தில் நடித்து வருகிறார். இவரைப்போலவே வருடக் கணக்கில் சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்தவர் டாக்டர் ராஜ சேகர். தற்போது இவர் தெலுங்கு திரையுலகில் மீண்டும் களமிறங்கியுள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்