ஆப்நகரம்

பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் நுழையும் ‘விஸ்வரூபம் 2’ பட நடிகை!

பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் ‘விஸ்வரூபம் 2’ படத்தில் நடித்த பிரபல நடிகை பூஜா குமார் வருகை தரவுள்ளாராம்.

Samayam Tamil 28 Jul 2018, 3:24 pm
பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் ‘விஸ்வரூபம் 2’ படத்தில் நடித்த பிரபல நடிகை பூஜா குமார் வருகை தரவுள்ளாராம்.
Samayam Tamil பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் நுழையும் ‘விஸ்வரூபம் 2’ பட நடிகை!


நடிகர் கமல்ஹாசன் பிக்பாஸ் முதல் சீசனை அடுத்து, தற்போது சீசன் 2வையும் தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிகழ்ச்சியை அதிகமானவர்கள் பார்த்து வருகின்றனர். நிகழ்ச்சிக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

இந்த நிகழ்ச்சியை சனி மற்றும் ஞாயிற்றுகிழமைகளில் வழக்கத்தை விட ஏராளமானோர் பார்க்கின்றனர். 2வது சீசன் தொடங்கப்பட்டு முதன்முதலாக ‘கடைக்குட்டி சிங்கம்’ படக்குழுவினர் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றனர்.

இப்போது கமல்ஹாசன் நடித்து இயக்கியிருக்கும் ‘விஸ்வரூபம் 2’ படக்குழுவினர் தற்போது பிக்பாஸ் வீட்டிற்குள் செல்ல இருப்பதாக தெரிகிறது. எப்படி என்றால் இப்படத்தில் நடித்திருக்கும் பூஜாகுமார் பிக்பாஸ் வீட்டில் இருப்பது போல் ஒரு புகைப்படம் சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்