ஆப்நகரம்

வாய்ப்புக்காக கேரளாவில் முகாமிட்டிருக்கும் ‘சேவல்’ நாயகி!

அடுத்தடுத்து படத்தில் நடிக்கும் வாய்ப்புகள் கிடைப்பதால் ‘சேவல்’ பட நாயகியான பூனம் பாஜ்வா கேரளாவில் முகாமிட்டு வருகிறார்.

TOI Contributor 8 Aug 2017, 3:52 pm
அடுத்தடுத்து படத்தில் நடிக்கும் வாய்ப்புகள் கிடைப்பதால் ‘சேவல்’ பட நாயகியான பூனம் பாஜ்வா கேரளாவில் முகாமிட்டு வருகிறார்.
Samayam Tamil poonam bajwa is getting more chances in malayalam industry
வாய்ப்புக்காக கேரளாவில் முகாமிட்டிருக்கும் ‘சேவல்’ நாயகி!


மும்பை நடிகை பூனம் பாஜ்வா ‘சேவல்’ படம் மூலம் தமிழுக்கு வந்தவர். தொடர்ந்து, ‘தெனாவெட்டு’, ‘கச்சரி ஆரம்பம்’, ‘துரோகி’ உட்பட பல படங்களில் நடித்துள்ளார். நாயகி கனவுடன் வந்த இவருக்கு பெரிய வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதனால், கேரக்டர் ரோல்களில் நடிக்க ஆரம்பித்தார். தமிழில் ‘ஆம்பள’, ‘ரோமியோ ஜூலியட்’, ‘அரண்மனை-2’ என பல படங்களில் நடித்தார் பூனம் பாஜ்வா.

தற்போது இவருக்கு மலையாளத்திலும் வாய்ப்புகள் தேடி வருகிறது. மலையாளத்திலும் கேரக்டர் நடிகையாக நடித்துள்ளார். தற்போது இவர் ‘மாஸ்டர் பீஸ்’, ‘மரியா’ உள்ளிட்ட சில படங்களில் கதைக்கு முக்கியத்துவம் வாய்ந்த கேரக்டரில் நடித்து வருகிறார். இந்த படங்களைத் தொடர்ந்து ‘லேனா அலெக்சாண்டர்’ என்ற படத்தில் நடிக்கவுள்ளார்.

முன்பு சென்னை வந்து நடித்துக் கொண்டிருந்த பூனம் தற்போது நேராக கேரளாவுக்கு பறந்து விடுகிறார்.


Poonam Bajwa is getting more chances in Malayalam industry

அடுத்த செய்தி

டிரெண்டிங்