ஆப்நகரம்

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரரை மணக்கும் தமன்னா?: உண்மை இதோ

தமன்னாவுக்கும், பாகிஸ்தானை சேர்ந்த கிரிக்கெட் வீரர் அப்துல் ரஸாக்கிற்கும் திருமணம் என்று வதந்தி கிளம்பி தீயாக பரவியுள்ளது.

Samayam Tamil 7 May 2020, 10:16 am
தமிழ், தெலுங்கு, இந்தி படங்களில் கவனம் செலுத்தி வரும் தமன்னாவுக்கும், வதந்திகளுக்கும் அப்படி ஒரு பொருத்தமாக உள்ளது. நான் யாரையும் காதலிக்கவில்லை, சிங்கிளாகத் தான் இருக்கிறேன் என்று தமன்னா பல முறை விளக்கம் அளித்தும் அவரை பற்றி சில வதந்திகள் அவ்வப்போது பரவுகிறது.
Samayam Tamil tamannaah


இந்நிலையில் தான் கடந்த 2017ம் ஆண்டு துபாயில் உள்ள நகைக்கடை திறப்பு விழாவில் கலந்து கொண்ட தமன்னா பாகிஸ்தானை சேர்ந்த கிரிக்கெட் வீரர் அப்துல் ரஸாக்குடன் நின்றபோது எடுத்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வலம் வருகிறது.

அந்த புகைப்படத்தை பார்த்துவிட்டு தமன்னா ரஸாக்கை விரைவில் திருமணம் செய்து கொண்டு பாகிஸ்கான் மருமகளாகப் போகிறார் என்று பேச்சு கிளம்பியுள்ளது. இது போன்ற வதந்திகளால் தமன்னா டயர்டாகிவிட்டதாலோ என்னவோ, இம்முறை விளக்கம் எதுவும் அளிக்கவில்லை.

ஒரு முறை கிரிக்கெட் வீரர், அடுத்த முறை நடிகர், அடுத்த முறை டாக்டர் என்று யாராவது ஒருவருடன் சேர்த்து பேசுகிறார்கள் என தமன்னா முன்பு வேதனை தெரிவித்தார். முன்னதாக தமன்னா கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லியை காதலித்ததாகவும் கிசுகிசுக்கப்பட்டது.

தமன்னாவுக்கு காதல் மீது நம்பிக்கை உள்ளது. ஆனால் இது போன்ற வதந்திகள் தான் அவரை எரிச்சல் அடையச் செய்கிறது. தமன்னா கையில் ஒரு இந்தி படமும், இரண்டு தெலுங்கு படங்களும். தற்போதைக்கு அவர் காதலிப்பது வேலையை மட்டும் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

கார்த்திக் அந்த வீடியோவை வெளியிட்டிருக்கக் கூடாது: சுசித்ரா

அடுத்த செய்தி

டிரெண்டிங்