ஆப்நகரம்

"பொதுவாக என் மனசு தங்கம்” படத்தில் மீசையை முறுக்கும் உதயநிதி

‘பொதுவாக எம்மனசு தங்கம்‘ படத்துக்கு தணிக்கைக் குழுவினர் ‘யு’ சான்றிதழ் வழங்கியுள்ளனர்.

TNN 19 Jul 2017, 5:31 pm
‘பொதுவாக எம்மனசு தங்கம்‘ படத்துக்கு தணிக்கைக் குழுவினர் ‘யு’ சான்றிதழ் வழங்கியுள்ளனர்.
Samayam Tamil pothuvaga en manasu thangam movie got u certificate
"பொதுவாக என் மனசு தங்கம்” படத்தில் மீசையை முறுக்கும் உதயநிதி


நடிகர் உதயநிதியை வைத்து புதுமுக இயக்குநர் தளபதி இயக்கிய படம் ‘பொதுவாக எம்மனசு தங்கம்’. இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இறுதிகட்டப் பணிகள் முடிந்து, தணிக்கை விண்ணப்பித்திருந்தார்கள்.
தற்போது தணிக்கைக் குழுவினர் படத்திற்கு ‘யு’ சான்றிதழ் அளித்துள்ளனர். இந்தப் படத்தை ஆகஸ்ட் மாதத்தில் வெளியிட முடிவு செய்துள்ளனர். அதற்கான விளம்பரப்படுத்தும் பணியைத் தொடங்கியுள்ளனர். படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

இப்படத்தில் நடிகை நிவேதா பெத்துராஜ் உதயநிதிக்கு ஜோடியாக நடித்துள்ளார். மேலும் படத்தில் பார்த்திபன், சூரி, மயில்சாமி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். படத்திற்கு இமான் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தை அடுத்து உதயநிதி ஸ்டாலின் பிரியதர்ஷன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்